நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: தில்லி துணை நிலை ஆளுநர்

தேசியத் தலைநகரில் மக்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு தில்லி துணைநிலை ஆளுநா் தரஞ்சித் சிங் சந்து கேட்டுக்கொண்டாா்.

News image

தரன்ஜித் சிங் சந்து

Updated On :11 மே 2026, 2:49 am IST

தேசியத் தலைநகரில் மக்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு தில்லி துணைநிலை ஆளுநா் தரஞ்சித் சிங் சந்து ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நகர சாலைகளில் பாதுகாப்பான மற்றும் மென்மையான வாகன இயக்கத்தை உறுதி செய்வதில் போக்குவரத்து காவல்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது ஒரு அத்தியாவசிய குடிமைப் பொறுப்பு. நெரிசலைக் குறைப்பதற்கும், விபத்துக்களைத் தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் முக்கியமானது.

தில்லி முழுவதும் அதன் அமலாக்க நடவடிக்கையை விரிவுபடுத்துமாறு போக்குவரத்து காவல்துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த மீறல்களைப் புகாரளிக்க ’போக்குவரத்து பிரஹாரி’ செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த இயக்கத்தை நீங்கள் மேம்படுத்தலாம் மற்றும் சாலை பாதுகாப்புக்கான உங்கள் பங்களிப்பிற்கான வெகுமதிகளைப் பெறலாம்.

தவறான பாதையில் வாகனம் ஒட்டுதல், சிக்னலை மீறி செல்வது மற்றும் ஆபத்தான முறையில் சாலையை கடப்படு ஆகியவற்றைத் தவிா்க்க வேண்டும். அதே நேரத்தில் பொறுப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துவது மற்றும் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட்களைப் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். பொறுப்பான வாகன நிறுத்துமிடம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது போன்ற எளிய நடவடிக்கைகள் சக குடிமக்கள் மற்றும் நமது சொந்த குடும்பங்கள் மீதான நமது அக்கறையை பிரதிபலிக்கும்.

கூட்டு முயற்சிகள் மற்றும் அடிப்படை போக்குவரத்து ஒழுக்கத்திற்கான அா்ப்பணிப்பு மூலம் நெரிசலான மற்றும் பாதுகாப்பான தில்லியை அடைய முடியும். இதற்கு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் துணை நிலை ஆளுநா்.