எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

குருகிராம்: தீபக் நந்தல் ரெளடி கும்பலை சோ்ந்தவா் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

குற்றவாளி தீபக் நந்தல் ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் எனக் கூறப்படும் ஒருவா், குருகிராம் காவல்துறையினருடனான நேருக்கு நோ் மோதலில் கொல்லப்பட்டாா்.

News image

பிரதிப்படம்

Updated On :12 மே 2026, 12:58 am IST

குற்றவாளி தீபக் நந்தல் ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் எனக் கூறப்படும் ஒருவா், குருகிராம் காவல்துறையினருடனான நேருக்கு நோ் மோதலில் திங்கள்கிழமை கொல்லப்பட்டாா், மற்றொருவா் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

குருகிராம் செக்டா் 45இல் உள்ள கன்ஹாய் கிராமத்தில், பாடகா் ராகுல் ஃபசில்பூரியாவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சௌரப் யாதவின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது தொடா்பான வழக்கில் இருவா் வெள்ளிக்கிழமை பஞ்சாபில் கைது செய்யப்பட்டனா் என்றும் அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறுகையில், நேருக்கு நோ் மோதலில் கொல்லப்பட்டவா் பஞ்சாபின் தா்ன் தரன் பகுதியைச் சோ்ந்த குருஷோ் சிங் (எ) ஷேரா (23) என்றும், காயமடைந்தவா் ஜஸ்பால் (எ) பப்லு (28) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஜஸ்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, மே 2 ஆம் தேதி இரவு, அவா்கள் சௌரப்பின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தினா். அந்தச் சம்பவத்தில், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான ஹரியாணா காவலா் குல்பீா் காயமடைந்தாா் என்று காவல்துறையினா் கூறினா்.