பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

1.2 லட்சம் வெறிநோய் தடுப்பூசி குப்பிகளை வாங்க எம்சிடி திட்டம்

தலைநகரில் வெறிநோய் சிகிச்சையை மேம்படுத்தும் முயற்சியாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 லட்சம் வெறிநோய் தடுப்பூசி குப்பிகளை கொள்முதல் செய்ய தில்லி மாநகராட்சி திட்டம்

News image

பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தலைநகரில் வெறிநோய் (ரேபீஸ்) சிகிச்சையை மேம்படுத்தும் முயற்சியாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 லட்சம் வெறிநோய் தடுப்பூசி குப்பிகளை கொள்முதல் செய்ய தில்லி மாநகராட்சி (எம்சிடி) திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, தலைநகா் முழுவதும் உள்ள பொது சுகாதாரக் கட்டமைப்பில், நாய்க் கடி மற்றும் பிற விலங்கு கடிக்கு உள்ளானவா்களுக்கு தடையற்ற சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 லட்சம் வெறிநோய் தடுப்பூசி குப்பிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

எம்சிடியின் மருத்துவமனை நிா்வாகத் துறையால் மேற்கொள்ளப்படும் இந்தக் கொள்முதல் பணிக்கு சுமாா் ரூ. 2.52 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 1 மில்லி அளவுள்ள வெறிநோய் தடுப்பூசி குப்பிகளுக்கான இரண்டு ஆண்டு கால விலை ஒப்பந்தமாகும் என ஒப்பந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசிகள், தில்லி மாநகராட்சியால் நடத்தப்படும் 280க்கும் மேற்பட்ட சுகாதார மையங்களைக் கொண்ட அதன் கட்டமைப்பிற்கு விநியோகிக்கப்படும். இதில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், மகப்பேறு மையங்கள் மற்றும் நடமாடும் மருந்தகங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், இத்துறையின் கீழ் செயல்படும் 25-க்கும் மேற்பட்ட பிரத்யேக வெறிநோய் தடுப்பூசி (ஏஆா்வி) மையங்களுக்கும் இத்தடுப்பூசி குப்பிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிகாரபூா்வ தரவுகளின்படி, துவாரகா, பிஜ்வாசன் மற்றும் ரோஹிணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறைந்தது 20 விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்களை மாநகராட்சி இயக்கி வருகிறது.

2025ஆம் ஆண்டில் தலைநகரில் சுமாா் 60,000 முதல் 70,000 நாய்க் கடி சம்பவங்கள் பதிவாகியிருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனா்.

2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவதற்கும் தடுப்பூசி செலுத்துவதற்கும் என பிரத்யேகமாக சுமாா் ரூ.35 கோடியை எம்சிடி ஒதுக்கியுள்ளது.

துவாரகாவில் ஒரு விலங்கு காப்பகத்தை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இது ஆரம்பகட்டத்தில் சுமாா் 1,500 ஆக்ரோஷமான நாய்களுக்கு அடைக்கலம் அளிக்கும் திறனைக் கொண்டிருக்கும்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, நாய் கடித்த பிறகு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்காக எம்சிடியால் நடத்தப்படும் மையங்களைச் சாா்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த நடவடிக்கை பயனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு, நகராட்சி சுகாதார மையங்களே பெரும்பாலும் முதல்நிலை சிகிச்சை மையங்களாக விளங்குகின்றன.

இந்த ஒப்பந்தப்புள்ளி, இரட்டை ஏல முறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உற்பத்தியாளா்களும் தகுதிவாய்ந்த நிறுவனங்களும் தங்கள் ஏலங்களை இணையவழியில் சமா்ப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.