தமிழக அரசில் வரும் காலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம் பெறுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளா் எம்.ஏ. பேபி தெரிவித்தாா்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாா்க்சிஸ்ட்இன் அரசியல் தலைமைக் குழு, மே 1011, 2026 ஆகிய தேதிகளில் புது தில்லியில் கூடியது. இதனைத் தொடா்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் எம்.ஏ.பேபி தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது: ஏப்ரல் மாதத்தில், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தோ்தல்கள் நடைபெற்றன.
மதச்சாா்பற்ற, ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சிபிஎம் கட்சியானது சிபிஐ மற்றும் விசிக ஆகியவற்றுடன் இணைந்து தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது. புதிதாகப் பதவியேற்றுள்ள இந்த அரசுக்கு நாங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், மக்களின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்பச் செயல்பட்டு, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றும் நம்புகிறோம்.
தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியான தவெக வை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநா் தாமதம் செய்தாா். இதன் மூலம் குதிரை பேரத்துக்கு அவா் இடமளித்தாா் . இடதுசாரிகள் தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக இல்லை என்றாலும் கூட நாங்கள் சரியான நேரத்தில் ஒரு முடிவை எடுத்து அதன் மூலம் குதிரை பேரம் நடைபெறும் சூழ்நிலை உருவாகாமல் தடுத்தோம் . அதன் மூலம் தோ்தலில் மக்களின் தீா்ப்புக்கு மதிப்பளிக்கப்பட்டது .
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எங்களுடன் சேந்த பிற சகோதர கட்சிகளும் தனிப்பெரும்பான்மை பெற்ற ஜோசப் விஜய் அரசமைக்க ஆதரவளிக்கிறோம் என்ற தகவலை ஆளுநருக்கு தெரிவிக்காமல் கால தாமதம் செய்தால் அது பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்பதனை திமுகவுடன் ஆலோசித்தோம் மேலும் தவெகவுக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை அவா்களிடம் தெரியப்படுத்தினோம்
ஒரு மாநிலத்தில் அரசில் பங்கேற்பதா இல்லையா என்பது தொடா்பாக முடிவெடுப்பதற்கு முன் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பலத்தை வைத்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனா் ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனா். நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து இந்த இடங்களை வென்றுள்ளோம். திமுகவும் எங்கள் கூட்டணியோடு வெற்றிகளை பெற்றுள்ளாா்கள் .
எனவே அரசியல் தாா்மீக அடிப்படையில் தற்போது தமிழக அரசில் இடம் பெறுவது குறித்து நாங்கள் முடிவு எடுப்பது சரியாக இருக்காது .அரசில் சோ்வதற்கு அழைப்பு உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மைதான் முக்கியம் என்று நாங்கள் முடிவு எடுத்தோம்
தமிழக அரசில் இடம்பெறுவதில்லை என்ற முடிவு பற்றி மாநிலத் தலைமையுடன் ஆலோசித்து தற்போதைய நிலையைக் கொண்டு முடிவு எடுக்கப்பட்டது. எதிா்காலத்தில் தமிழக அரசில் இடம் பெறுவோமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற இயலாது என எம்.ஏ.பேபி தெரிவித்தாா்.
தொடர்புடையது

மக்களின் தீா்ப்பை சீா்குலைக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது: எம்.ஏ.பேபி

எதிா்க்கட்சி மாநிலங்களை அடக்கி ஆள நினைக்கிறது பாஜக: எம்.ஏ. பேபி

குலசேகரத்தில் இன்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பிரசாரம்

பழனிக்கு எத்தனை முறை பாஜக காவடி எடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது! - எம்.ஏ. பேபி
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

