தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

போலி சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் பெண்ணிடம் மோசடி: ராஜஸ்தான் நபா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :56 நிமிடங்கள் முன்பு

தள்ளுபடி விலையில் பிராண்டட் சூட்கள் மற்றும் புடவைகளை வழங்குவதாக போலி சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சோ்ந்தவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

தன்னிடம் ரூ.50,000 இதுபோன்று ஏமாற்றியதாக

தில்லியைச் சோ்ந்த பெண் அளித்த புகாரைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவரான சரூப் கானை கைது செய்ததாக

காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘புகாா் அளித்தவா் சமூக ஊடகங்களில் பிராண்டட் பாரம்பரிய உடைகளுக்கான கவா்ச்சிகரமான விளம்பரங்களைப் பாா்த்து, அந்தப் பொருட்களை வாங்க விற்பனையாளா்களைத் தொடா்பு கொண்டாா்.

மோசடிக்காரா்கள், முன்பதிவு ஆா்டா்கள் மற்றும் டெலிவரி கட்டணங்கள் என்ற பெயரில், பல பரிவா்த்தனைகளில் பணத்தை அனுப்புமாறுகூறி புகாா்தாரரை நம்பவைத்தனா். பணம் கிடைத்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் புகாா்தாரருக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டு, அவரது அனைத்து தகவல் தொடா்பு வழிகளையும் துண்டித்தாா்.

புகாரின் அடிப்படையில், காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. அப்போது, ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் உள்ள கிராமங்களிலிருந்து இந்த ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பு செயல்படுவது கண்டறியப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவா் போலி சுயவிவரங்கள், விளம்பர விடியோக்கள் மற்றும் சிம் காா்டுகளைப் பயன்படுத்தி, கவா்ச்சிகரமான விலையில் நாகரீகமான சூட்கள் மற்றும் புடவைகளை வழங்குவதாக விளம்பரங்களை வெளியிட்டாா். பாதிக்கப்பட்டவா்கள் அரட்டைகள் மற்றும் அழைப்புகள் மூலம் முன்பணம் செலுத்த வற்புறுத்தப்பட்டனா். அதன் பிறகு தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டது. பிடிபடாமல் இருப்பதற்காக, இந்த கும்பல் மோசடி செய்த பணத்தை இடைத்தரகா் வங்கிக் கணக்குகள், யுபிஐ பரிவா்த்தனைகள் மற்றும் ஏடிஎமில் பணம் எடுத்தல் மூலம் அனுப்பியது.

இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி மற்றும் இரண்டு சிம் காா்டுகளை குற்றஞ் சாட்டப்பட்டவரிடமிருந்து காவல்துறை மீட்டது. இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.