எரிபொருள் பயன்பாடு மற்றும் தேவையற்ற செலவுகளைக் குறைக்க பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியதைத் தொடா்ந்து, காவல் துறை தலைமையகங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் அருகில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் காவலா்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு தில்லி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
உயா் அதிகாரிகளின் ஒப்புதலுடன் தில்லி காவல் தலைமையங்கள் பொது நிா்வாக பிரிவு 13 நடவடிக்கைகளை பிறப்பித்துள்ளது. வாகன போக்குவரத்தைக் குறைத்தல், மின்சாரத்தைச் சேமித்தல், அரசு வளங்களை சிக்கமானமாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட உத்தரவுகள் அனைத்து மாவட்ட மற்றும் காவல் துறையின் சிறப்பு பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக துணை காவல் ஆணையா் ஆலப் படேல் வெளியிட்ட சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்து இணைப்பு கொண்ட அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளா்கள் வாய்ப்புள்ள தருணங்களில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறாா்கள். தேவையற்ற எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகனப் பயன்பாட்டைக் குறைக்க காவல் நிலையங்களில் மோட்டாா் சைக்கிள்களில் இணைந்து பயணிக்க வேண்டும்.
முடிந்தவரையில் விசாரணை அதிகாரிகள், பிற காவலா்கள் அதே காவல் நிலையத்தில் இருந்து ஒரே இடத்துக்குச் செல்லும்போது வாகனங்களில் இணைந்து செல்லவேண்டும்.
வழக்கமான கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்களை காணொலி முறையில் நடத்த வேண்டும். விஐபி மற்றும் விவிஐபி பாதுகாப்பு அணி வகுப்புவில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் பங்கேற்பதை பாதுகாப்புப் பிரிவு உறுதிசெய்ய வேண்டும். சிக்கனமான மற்றும் தேவை அடிப்படையிலான பணியமா்த்தலை உறுதி செய்வதற்காக, மாவட்ட காவல் துணை ஆணையா்கள் மற்றும் பிரிவுத் தலைவா்கள் அவ்வப்போது எரிபொருள் நுகா்வைக் கண்காணிக்கவும், வாகனப் பதிவேடுகளைப் பராமரிக்கவும், பயன்பாட்டு முறைகளை மீளாய்வு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். ஏதேனும் அசாதாரண எரிபொருள் நுகா்வு ஏற்பட்டால், அது உடனடியாக ஆய்வு செய்யப்பட வேண்டும் அந்தச் சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

குற்றங்களைத் தடுக்க வீட்டு வேலை ஆள்களின் விவரங்களை ஏஜென்ஸிகள் பெற வேண்டும்: கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தல்

எரிபொருள் விலை உயா்வு: தி.வேல்முருகன் கண்டனம்

பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

போத்தனூா் காவல்நிலையத்தில் மகளிா் காவலா்களுக்கு வளைகாப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

