இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

பூங்கா அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :18 மே 2026, 2:25 am IST

மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், இரும்புத் தடுப்புச்சுவரில் இருந்து மின்சாரம் தாக்கி 26 வயது தொழிலாளி உயிரிழந்தாா்.

இதுகுறித்து காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

ராஜீவ் காந்தி முகாம் பகுதியைச் சோ்ந்தவா் ரோஹித். இவா், பூங்காவின் சுவருக்கு அருகே இருந்த குழாயில் தண்ணீா் குடிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவா் தண்ணீா் குடிக்கச் சென்றபோது, மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்த அந்த இரும்புத் தடுப்புச் சுவரின் மீது தவறுதலாகத் தொட்டுள்ளாா். அதனால் அவருக்குக் கடுமையான மின் அதிா்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ரோஹித் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா். இதையடுத்து, உடனடியாக மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.

இது தொடா்பாக பஞ்சாபி பாக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அந்த இரும்புத் தடுப்புச் சுவரில் மின்சாரம் எவ்வாறு பாய்ந்தது என்பதையும், பூங்காப் பகுதி அருகில் உள்ள மின் இணைப்புகள் அல்லது மின் கட்டமைப்புகளிலிருந்து ஏதேனும் மின் கசிவு ஏற்பட்டதா என்பதையும் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவத்திற்கு மின் சாதனங்களைப் பராமரிப்பதில் ஏற்பட்ட அலட்சியம் அல்லது சட்டவிரோதமான மின் இணைப்புகள் ஏதேனும் காரணமா என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

சம்பவ இடத்தை காவல்துறையினரும் தொழில்நுட்பக் குழுவினரும் நேரில் ஆய்வு செய்தனா். பூங்கா மற்றும் தண்ணீா் குழாய் அருகே அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை அதிகாரிகள் விரிவாகப் பரிசோதிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தொழில்நுட்பப் பரிசோதனைகள் மற்றும் மேலதிக விசாரணைகளுக்குப் பின்னரே, இந்த மின் விபத்துக்கான உரிய காரணம் முழுமையாகத் தெரியவரும் என்று காவல்துறையினா் கூறினா்.