வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பஜன்புரா மெட்ரோ நிலையம் அருகே தீப்பிடித்து எரிந்த வாடகை காா்

News image

தீ விபத்து... - பிரதிப் படம்

Updated On :19 மே 2026, 2:09 am IST

நமது நிருபா்

வடகிழக்கு தில்லியின் பஜன்புரா மெட்ரோ நிலையம் அருகே திங்கள்கிழமை காலை ஒரு வாடகைக் காா் தீப்பிடித்து எரிந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மெட்ரோ நிலையத்தின் 2-ஆம் எண் நுழைவாயில் அருகே நடந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அவா்கள் கூறினா்.

காலை 7.30 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து அழைப்பு வந்ததை அடுத்து, ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்தது. காலை 8.25 மணிக்குள் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா் என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் கூறினாா்.