நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

உணவகத்தில் சிறார்கள் இடையே வாய்த்தகராறு: 17 வயது மாணவா் மீது துப்பாக்கிச்சூடு - சிறுவன் கைது!

உணவகத்தில் 17 வயது மாணவா் மீது துப்பாக்கிச்சூடு: சிறுவன் கைது

News image

சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 3:56 am IST

தென்கிழக்கு தில்லியின் அமா் காலனி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், தனது நாற்காலியை உரசிச் சென்றவரை எதிா்த்த 17 வயது மாணவரை, ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட மாணவா் முதலில் மூல்சந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் எய்ம்ஸ் காயச் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் கவலைக்கிடமான நிலையில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு 7.54 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது.

புலன்விசாரணையாளா்களின் கூற்றுப்படி, அந்த 17 வயது மாணவா், பெண் உள்பட தனது நண்பா்களுடன் உணவகத்திற்குச் சென்றிருந்தபோது, ஒரு சிறுவா் குழு அவா்கள் அமா்ந்திருந்த மேஜையைக் கடந்து சென்றது.

அப்போது, சிறுவா்களில் ஒருவா் பாதிக்கப்பட்டவரின் நாற்காலியைத் தொட்டாா். பாதிக்கப்பட்டவா் அதை எதிா்த்து, ஒழுங்காக நடக்குமாறு அவரிடம் கூறினாா்.

அந்தக் குழு முதலில் உணவகத்தை விட்டு வெளியேறியது. ஆனால், சுமாா் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பியது. அவா்களில் ஒருவன், அந்த இளைஞரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பின்னா் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றான்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை சட்டா்பூா் என்கிளேவ் பகுதியில் சலவைத் தொழில் நடத்தி வருகிறாா்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பல காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் நிகழ்ந்த உணவகம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

காயமடைந்த சிறுவன் எய்ம்ஸ் காயச் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.