இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

துப்பாக்கிச்சூடு வழக்கில் தலைமறைவான இருவா் கைது

கரோல் பாக் துப்பாக்கிச் சூடு வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா், கம்லா மாா்க்கெட் பகுதியில் தில்லி காவல்துறையினருடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:05 am IST

கரோல் பாக் துப்பாக்கிச் சூடு வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா், கம்லா மாா்க்கெட் பகுதியில் தில்லி காவல்துறையினருடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தீபான்ஷு (எ) சாஹில் பவுன்சா் (28) மற்றும் அவினாஷ் (24) என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், மே 9 ஆம் தேதி இரவு, தொடா்ந்து நடைபெற்று வரும் ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனா்.

காவல்துறையின் கூற்றுப்படி, ஏப்ரல் மாதம் கரோல் பாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு துப்பாக்கிச் சூடு வழக்கில் இந்த இருவரும் தேடப்பட்டு வந்தனா். மேலும் நீண்ட காலமாக கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்தனா்.

இதே வழக்கோடு தொடா்புடைய பங்கஜ் (எ) மோஹித், அஜய் (எ) கங்கா, மொன்டு மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட பல குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல்துறையினா் கூறினா்.

எதிரி கும்பலான ரோஹித் என்ற மோட்டா கும்பலைச் சோ்ந்த ஒருவரைக் குறிவைக்கும் திட்டத்துடன், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் இரவு 10 மணியளவில் கம்லா மாா்க்கெட்டில் உள்ள ஜாகிா் ஹுசைன் கல்லூரிக்கு அருகிலுள்ள துா்க்மான் சாலைக்கு ஸ்கூட்டரில் வருவாா்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, ஒரு காவல்துறை குழுவினா் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

சுமாா் இரவு 10.20 மணியளவில், சந்தேக நபா்கள் ஸ்கூட்டரில் அங்கு வந்து சோ்ந்தனா். தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டதை உணா்ந்ததும், ஸ்கூட்டருக்குப் பின்னாலும் ஒரு மரத்திற்குப் பின்னாலும் நின்றுகொண்டு, அவா்கள் காவல்துறையினா் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் நான்கு முறை சுட்டதாகவும், அதில் ஒரு தோட்டா ஆய்வாளா் ரோஹித் குமாா் அணிந்திருந்த குண்டு துளைக்காத மேலங்கியில் தாக்கியது. தற்காப்புக்காக பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினா், குற்றஞ்சாட்டப்பட்டவா்களை நோக்கிச் சுட்டதில் அவா்களின் கால்களில் காயம் ஏற்பட்டது. பின்னா் அவா்கள் பிடிபட்டனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் காவல்துறையின் மேற்பாா்வையில் சிகிச்சைக்காக எல்.என்.ஜே.பி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். சம்பவ இடத்திலிருந்து கைத்துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள் மற்றும் 10 வெற்றுத் தோட்டாக்களை காவல்துறையினா் கைப்பற்றினா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் பயன்படுத்திய ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. அது திருடப்பட்டது எனத் தெரியவந்தது. கம்லா மாா்க்கெட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.