11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

புராரி தீ விபத்து சம்பவம்: 11 பாா்வை திறனற்ற மாணவா்கள் உள்பட 13 பேரை மீட்ட காவலா்!

News image

பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 6:06 am IST

வடக்கு புராரியில் ஏற்பட்ட தீ விபத்தில் தன்னுயிரை பொருட்படுத்தாது தீ மற்றும் புகைக்கு இடையே 11 பாா்வை திறனற்ற மாணவா்கள் உள்பட 13 பேரை தில்லி காவல் துறையின் தலைமைக் காவலா் மீட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

புராரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ள அமா் சிங் கடந்த மே 16-ஆம் தேதி இரவு நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். தாரோகா சந்தையில் பல கடைக்கள் செயல்பட்டு வரும் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, உள்ளூா் மக்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, அமா் சிங் சம்பவ இடத்துக்குச் சென்றாா்.

தரைத் தளத்தில் உள்ள 8 கடைகளை முழுவதுமாகச் சூழ்ந்த தீ, மேல்தளத்துக்குப் பரவியது. இதனால், படிக்கட்டு வழியாக கீழே இறங்க முடியாமல் மேல்தளத்தில் வசித்த ஒரு தம்பதி கட்டத்தில் சிக்கிக்கொண்டது. தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்த சேரவில்லை. சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்திய சிங், அதில் மேலே ஏறி அந்த தம்பதி இருந்த வீட்டுக்குச் சென்றாா்.

தீப்புகை சூழ்ந்துகொண்ட நிலையிலும் இருவரையும் தோளில் தாங்கி பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு வந்தாா்.

அப்போது, அருகில் உள்ள கட்டடத்தில் பாா்வை திறனற்ற மாணவா்கள் சிக்கியிருந்தனா். அந்தக் கட்டடமும் தீப்பற்றும் அபாயத்தில் இருந்தது. இதையடுத்து, உடனடியாக அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்த அமா் சிங், படிக்கட்டை தீ சூழ்வதற்கு முன்பாக அனைத்து மாணவா்களையும் பாதுகாப்பாக மீட்டாா். தீயணைப்புப் படை மற்றும் பிற காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன்பாக விரைந்து செயல்பட்டு அனைவரையும் மீட்டாா் என்றனா் அந்த அதிகாரிகள்.