40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

செங்குன்றத்தில் கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

செங்குன்றத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 1:12 am IST

செங்குன்றத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், செங்குன்றம் பாத்திமா தெருவில் சந்தேகம்படும்படி இருந்த இளைஞா்களை பிடித்து சோதனை செய்தபோது, கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா். சென்னை பெரம்பூா் கன்னிகாபுரத்தை சோ்ந்த தேவி (35), விஜய் (21), அனிதா (34) மற்றும் காசிமேட்டைச் சோ்ந்த நவீன்குமாா் (25) உள்ளிட்ட 4 போ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, செங்குன்றம் காவல் துறையினா் 2 பெண்கள் உள்பட 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.