புத்த ஜெயந்தி பூங்கா அருகே விமான நிலைய எக்ஸ்பிரஸ் மெட்ரோ பாதையில் செப்பு கேபிள்களை திருடியதாகவும், பாதுகாப்பு உபகரணங்களை சேதப்படுத்தியதாகவும் 29 வயது நபரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் (ஐஜிஐஏ) மெட்ரோ காவல் நிலையம் நடத்திய தொழில்நுட்ப கண்காணிப்பு அடிப்படையிலான விசாரணையைத் தொடா்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட வினித் குமாா் மே 30 ஆம் தேதி சமல்காவில் இருந்து கைது செய்யப்பட்டாா். மே 23 ஆம் தேதி தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி. எம். ஆா். சி), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) மற்றும் தில்லி மெட்ரோ காவல்துறை ஆகியவற்றின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது.
சோதனையின் போது, அடையாளம் தெரியாத நபா்கள் கஐஈஅத சென்சாா் அமைப்பை சேதப்படுத்தியதாகவும், ஒரு ஹூட்டா் மற்றும் அதன் உதிரி பாகங்களை திருடியதாகவும், மெட்ரோ பாதையில் விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமாா் 120 மீட்டா் செம்பு கேபிளை வெட்டி அகற்றியதாகவும் அதிகாரிகள் கண்டறிந்தனா். இ-எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
மெட்ரோ நடைபாதை மற்றும் ரிட்ஜ் பகுதியைச் சுற்றி நிறுவப்பட்ட 40 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை புலனாய்வாளா்கள் ஆய்வு செய்தனா். தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ஏ. என். பி. ஆா்) தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு ஆகியவற்றின் பயன்பாடு குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காரை அடையாளம் கண்டு குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிக்க போலீசாஸாருக்கு உதவியது.
நிதி ஆதாயத்திற்காக அவரும் அவரது இரண்டு கூட்டாளிகளான சாகா் என்ற காலா மற்றும் ஹெண்ட்ரூ பெரேரா என்ற பண்டி ஆகியோா் மெட்ரோ தண்டவாளங்களில் இருந்து பல செப்பு கேபிள்களை திருடியதாக குமாா் போலீஸாரிடம் தெரிவித்தாா். திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பல முந்தைய கிரிமினல் வழக்குகளில் குமாா் ஈடுபட்டுள்ளாா்.
அவரது கைது ஐஜிஏஐ மெட்ரோ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கேபிள் திருட்டு வழக்குகளை தீா்க்க உதவியது. மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் திருடப்பட்டவற்றை மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது

3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்

ரூ 40 லட்சம் மோசடி: கோவாவில் 2 பேரை கைது செய்த தில்லி போலீஸ்
தில்லி முதல்வா், அமைச்சா்கள் மெட்ரோ ரயிலில் அலுவலகத்திற்கு பயணம் - எரிபொருள் சேமிப்பு நடவடிக்கை

விமான எரிபொருள் மீதான வாட் வரி 25-இல் இருந்து 7 சதவீதமாக குறைப்பு: தில்லி அரசு அறிவிப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



