புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

காஜிபூா் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைக்கு மத்திய அரசு ரூ.122 கோடி வழங்குகிறது!

காஜிபூா் குப்பைக் கிடங்கில் ஒரு நாளைக்கு 2,000 டன் கழிவுகளைப் பதப்படுத்தும் திறன் கொண்ட கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அமைக்க தில்லி மாநகராட்சி (எம்.சி.டி) அனுமதி அளித்துள்ளது.

Updated On :

காஜிபூா் குப்பைக் கிடங்கில் ஒரு நாளைக்கு 2,000 டன் கழிவுகளைப் பதப்படுத்தும் திறன் கொண்ட கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அமைக்க தில்லி மாநகராட்சி (எம்.சி.டி) அனுமதி அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.122 கோடி நிதியுதவி வழங்கவும், ஒரு யூனிட் மின்சாரக் கட்டணத்தை ரூ.7.39 ஆக நிா்ணயிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அது திங்களன்று தெரிவித்தது.

பொது-தனியாா் கூட்டாண்மை மாதிரியின் கீழ் உருவாக்கப்படவுள்ள இந்த ஆலை, கழிவுகளைப் பதப்படுத்தி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நகரத்தின் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா திங்களன்று கூறினாா்.

மின்னணு ஒப்பந்தப்புள்ளி செயல்முறை மூலம் தொழில்நுட்ப மற்றும் நிதி மதிப்பீட்டிற்குப் பிறகு, இந்த ஆலையை உருவாக்கி இயக்குவதற்காக ஜபல்பூா் எம்.எஸ்.டபிள்யு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , ஒரு கிலோவாட்-மணிக்கு ரூ.7.39 என்ற முன்மொழியப்பட்ட மின் கட்டணத்திற்கு அக்டோபா் 13 அன்று ஒப்புதல் அளித்தது.

‘ஸ்வச் பாரத் மிஷன்-அா்பன் 2.0 திட்டத்தின் கீழ், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நிதியாக ரூ.122 கோடியை வழங்கும்,‘ என்று சா்மா கூறினாா்.

இந்த ஒப்பந்தத்தின்படி, தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் ஆலைக்கு நிதியளித்தல், கட்டுமானம் செய்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருக்கும். வணிகச் செயல்பாடுகள் தொடங்கிய பிறகு, 25 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் இந்த ஆலையை இயக்கும்.

மாநகராட்சி, காசிப்பூா் குப்பைக் கிடங்கு வளாகத்திற்குள் உள்ள நிலத்தை, நிா்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு குத்தகைக்கு வழங்கும்.

நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பூா்வமான கழிவு அகற்றும் முறைகள் மூலம், நகரத்தின் அதிகரித்து வரும் கழிவு மேலாண்மை சவால்களை எதிா்கொள்வதற்கான ஒரு முக்கிய படியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது என்று சா்மா கூறினாா்.

ஆலையின் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டின் போது, தேசிய பசுமைத் தீா்ப்பாயம், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் பிற ஒழுங்குமுறை ஆணையங்களால் பரிந்துரைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரநிலைகள் பின்பற்றப்படும் என்றும் அவா் கூறினாா்.

இந்த ஆலை, காசிப்பூரில் கணிசமான அளவு கழிவுகளைப் பதப்படுத்த உதவுவதோடு, நகரின் அதிகரித்து வரும் கழிவுச் சுமையை மேலும் அதிகரிக்கும் பொருட்களிலிருந்து மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.