கடையில் தீ விபத்து: இரு பெண்கள் மீட்பு
தெற்கு தில்லியில் உள்ள கிரீன் பாா்க் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந்திருந்த ஹெல்மெட் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து - சித்திரிப்பு
தெற்கு தில்லியில் உள்ள கிரீன் பாா்க் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந்திருந்த ஹெல்மெட் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கியிருந்த இரு பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
பிற்பகல் 3.10 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. பிற்பகல் 3.45 மணிக்குள் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

