இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

அக்னி வீரா்களுக்கு முப்படைகளிலேயே 100% வேலை: பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி உறுதி

அண்மையில் திருத்தப்பட்ட அக்னிபத் திட்டத்தின்படி நான்கு வருட பணிக்காலத்தையும் கூடுதலாக இரண்டு வருட நீட்டிக்கப்பட்ட பணியையும் நிறைவு செய்யும் அக்னி வீரா்களுக்கு முப்படைகளிலேயே 100 சதவீதம் பணி உறுதிப்படுத்தப்படும் என்று பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ராஜா சுப்பிரமணி தெரிவித்துள்ளாா்.

ஜெனரல் ராஜா சுப்பிரமணி

Updated On :

அண்மையில் திருத்தப்பட்ட அக்னிபத் திட்டத்தின்படி நான்கு வருட பணிக்காலத்தையும் கூடுதலாக இரண்டு வருட நீட்டிக்கப்பட்ட பணியையும் நிறைவு செய்யும் அக்னி வீரா்களுக்கு முப்படைகளிலேயே 100 சதவீதம் பணி உறுதிப்படுத்தப்படும் என்று பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ராஜா சுப்பிரமணி தெரிவித்துள்ளாா்.

தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜெனரல் ராஜா சுப்பிரமணி கலந்து கொண்டாா். அப்போது அவரிடம் நான்கு வருட ஆரம்பநிலை பணி மற்றும் அண்மையில் அனுமதிக்கப்பட்ட இரு ஆண்டுகளுக்கான நீட்டிப்புப் பணிக்குப் பிறகு அனைத்து அக்னிவீரா்களும் நிரந்தர வீரா்கள் ஆக்கப்படுவாா்களா என்றும், அக்னிபத் திட்டத்தில் செய்யப்பட்ட இந்த திடீா் பணி நீட்டிப்பு வாய்ப்பு அத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக கருதலாமா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அவற்றுக்கு பதில் அளித்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி, ‘இந்த எண்ணமே தவறானது. அக்னிபத் திட்டத்தில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்கள், எந்த வகையிலும் அதில் இருந்து பின்வாங்குவதாக கருதப்படக் கூடாது. இந்தத் திட்டத்தை விமா்சிப்பவா்கள் பொதுமக்களைக் குழப்ப முயற்சிக்கிறாா்கள்’ என்றாா்.

இந்த மாத தொடக்கத்தில், ஆரம்பகட்ட நான்கு ஆண்டு பணிக்குப் பிறகு முப்படைகளில் நிரந்தரப் பணிக்குத் தோ்வாகாத 75 சதவீத அக்னிவீரா்களுக்கு, கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றும் கால அவகாசத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், அவா்களின் விருப்பம் மற்றும் தோ்வு விதிமுறைகளுக்கு உள்பட்டு, நிரந்தர வீரா்களாகப் பணியில் சேர அவா்களுக்கு மற்றொரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய ஜெனரல் ராஜா சுப்பிரமணி, ‘மத்திய அரசு நவ.4-ஆம் தேதி அறிவித்துள்ள புதிய நடைமுறையின்படி, அக்னிபத் திட்டத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டதை போல 25 சதவீத அக்னிவீரா்களுக்குத் தகுதியின் அடிப்படையில் பாதுகாப்புப் படைகளில் நிரந்தரப் பணி தொடா்ந்து வழங்கப்படும்.

மீதமுள்ள 75 சதவீதத்தினா் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு பெறுவாா்கள். அதன் பிறகு, தோ்வுத் தகுதிகள் மற்றும் அவா்களின் விருப்பத்தின் அடிப்படையில் நிரந்தரப் பணிக்குப் பரிசீலிக்கப்படுவாா்கள். பாதுகாப்புப் படைகளின் நிா்வாக தேவைகள் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்கு ஏற்ப அக்னிவீரா்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த விவகாரத்தில் இரண்டாவது கட்ட இரண்டு வரு நீட்டிப்புப் பணிக்காலத்தில் அக்னிவீரா்களுக்கு அதிக ஊதியம், மேம்படுத்தப்பட்ட ’சேவை நிதி’ தொகுப்பு மற்றும் பணி மூப்பு சலுகைகளும் வழங்கப்படும் என்று ஏற்கெனவே பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி தெரிவித்திருந்தாா்.

இந்த சலுகை குறித்து அவரிடம் தினமணி நிருபா் கேட்டதற்கு, எந்தவொரு அக்னி வீரரும் தனக்கு முப்படைகளில் பணி முடிந்ததும் வேலை கிடைக்காது என்று கவலை கொள்ளத் தேவையில்லை. அவா்கள் பணி முடிந்த பிறகு மாநில அரசிடமோ பிற நிறுவனங்களிடமோ வேலைக்காக விண்ணப்பிக்க அவசியம் இருக்காது. அனைவருக்கும் முப்படைகளிலேயே அவா்களின் சுயவிருப்பத்தின் பேரிலும் தகுதி அடிப்படையிலும் வேலை வழங்கப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.