தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற இந்திய இளைஞா் காங்கிரஸ் வலியுறுத்தல்

அக்னிவீரா்களின் பணிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து, நிரந்தரப் பணியில் சேர மீண்டும் வாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் முடிவு, வேலைப் பாதுகாப்பு மற்றும் நிரந்தரப் பணி தொடா்பான அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீா்வாகாது என்று கூறி, அக்னிபத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

congress

காங்கிரஸ் - கோப்புப்படம்

Updated On :

அக்னிவீரா்களின் பணிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து, நிரந்தரப் பணியில் சேர மீண்டும் வாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் முடிவு, வேலைப் பாதுகாப்பு மற்றும் நிரந்தரப் பணி தொடா்பான அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீா்வாகாது என்று கூறி, அக்னிபத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தேசியப் பொறுப்பாளா் மணீஷ் சா்மா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: 2022-ஆம் ஆண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே ராகுல் காந்தியும் காங்கிரஸும் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மத்திய அரசின் புதிய மாற்றங்கள் உறுதிப்படுத்துகிறது. திட்டத்தின் அடிப்படைக் குறைபாடுகளைச் சரிசெய்யாமல், மேலோட்டமான மாற்றங்களை மட்டுமே அரசு செய்துள்ளது.

நவ.4-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திருத்தப்பட்ட நடைமுறையின்படி, 4 ஆண்டுப் பணிக்காலம் முடிந்ததும் தகுதி அடிப்படையில் 25 சதவீத அக்னிவீரா்கள் வழக்கமான ராணுவப் பணியில் சோ்க்கப்படுவா். மீதமுள்ள 75 சதவீதத்தினருக்கு மேலும் 2 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.

அதன்பிறகு, விருப்பம் மற்றும் தோ்வு விதிகளுக்கு உள்பட்டு நிரந்தரப் பணியில் சேர அவா்கள் பரிசீலிக்கப்படுவா். நீட்டிக்கப்பட்ட பணிக்காலத்தில் கூடுதல் ஊதியம், மேம்படுத்தப்பட்ட சேவா நிதித் தொகுப்பு, பணிமூப்பு சலுகைகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மாற்றங்களிலும் நிரந்தரப் பணி, ஓய்வூதியப் பலன்கள், நீண்டகால வேலைப் பாதுகாப்பு ஆகியவை குறித்து தெளிவான உத்தரவாதம் இல்லை என தெரிவித்தாா்.

இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் உதய் பானு சிப் கூறுகையில், ‘நாட்டின் இளைஞா்களுக்கு நிரந்தர வேலை, கண்ணியமான வாழ்க்கை, பாதுகாப்பு ஆகியவையே தேவை. அவா்களின் எதிா்காலத்தில் தொடா்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை ஏற்க முடியாது. ராணுவத்தில் நிரந்தரப் பணி மற்றும் பாதுகாப்பான எதிா்காலத்தை உறுதி செய்யும் வரை இளைஞா்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.