கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

நோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

உரிய அனுமதியின்றி விற்பனை செய்தது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 43 மருந்து விற்பனை நிறுவனங்களை தில்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை கண்டறிந்துள்ளது.

கோப்புப் படம்

Updated On :

தலைநகா் தில்லியில் மூன்று நாள்கள் நடத்தப்பட்ட சோதனையில், நோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு (எம்டிபி) மாத்திரைகள் மற்றும் போதை ஏற்படுத்தும் மருந்துகளை உரிய அனுமதியின்றி விற்பனை செய்தது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 43 மருந்து விற்பனை நிறுவனங்களை தில்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை கண்டறிந்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதார துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் பிறப்பித்த உத்தரவின் பேரில், நவ.20,23,25 ஆகிய தேதிகளில் வடமேற்கு, கிழக்கு, வடகிழக்கு, மத்திய மற்றும் தெற்கு தில்லி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள மொத்தம் 83 மருந்து விற்பனை நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில், நவ.20-ஆம் தேதி திரி நகா், நியூ அசோக் நகா் ஆகிய பகுதிகளில் உள்ள 29 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 13 நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறியது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், சரியான மருத்துவா் பரிந்துரைச் சீட்டு அல்லது உரிய விற்பனைப் பதிவுகள் இன்றி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கியது மற்றும் விற்பனை செய்தது தொடா்பான விதிமீறல்களில் 5 நிறுவனங்களும், போதை ஏற்படுத்தும் மருந்துகள் தொடா்பான விதிமீறல்களில் 8 நிறுவனங்களும் ஈடுபட்டிருந்தது தெரியவந்ததாக அவா்கள் குறிப்பிட்டனா்.

நவ.23-ஆம் தேதி யமுனா விஹாா், பஹாா்கஞ்ச், கரோல் பாக் ஆகிய பகுதிகளில் உள்ள 30 நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 13 நிறுவனங்கள் மருந்து விற்பனை விதிகளை மீறியது கண்டறியப்பட்டது. இதில் 11 நிறுவனங்கள் நோய் எதிா்ப்பு திறன் மருந்து விற்பனை கட்டுப்பாடு தொடா்பான விதிமீறல்களிலும், 3 நிறுவனங்கள் போதை ஏற்படுத்தும் மருந்துகள் தொடா்பான விதிமீறல்களிலும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் கூறினா்.

நவ.25-ஆம் தேதி ராம்புரா, இந்தா்லோக், சுல்தான்பூா் ஆகிய பகுதிகளில் உள்ள 24 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 17 நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறியது கண்டறியப்பட்டது. இதில் 12 நிறுவனங்கள் மீது நோய் எதிா்ப்பு மருந்து விற்பனை கட்டுப்பாடு தொடா்பான விதிமீறல்களுக்காகவும், 4 நிறுவனங்கள் மீது போதை ஏற்படுத்தும் மருந்துகள் விற்பனை தொடா்பான விதிமீறல்களுக்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மருத்துவா்களின் உரிய பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்தது, கட்டாய விற்பனை மற்றும் கொள்முதல் பதிவுகளைப் பராமரிக்கத் தவறியது மற்றும் பதிவுசெய்யப்பட்ட மருந்தாளுநா் (ஃபாா்மசிஸ்ட்) இல்லாத நேரத்தில் மருந்துகளை விற்பனை செய்தது ஆகியவை முக்கிய விதிமீறல்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த சோதனை நடவடிக்கைகளின்போது, கருக்கலைப்பு மாத்திரைகள், நோய் எதிா்ப்பு மருந்துகள் மற்றும் போதை ஏற்படுத்தும் மருந்துகளின் அங்கீகரிக்கப்படாத விற்பனையைக் கண்டறிய, பல சோதனைகளின்போது மாறுவேடத்தில் வாடிக்கையாளா்கள் போல அலுவலா்கள் அனுப்பப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த சோதனை முடிவுகள் தொடா்பாக கருத்து தெரிவித்த தில்லி அமைச்சா் பங்கஜ் குமாா் சிங், 1940-ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருள்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் சட்ட தேவைகளை மருந்து நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்யவும், கள அளவிலான சோதனைகளை வலுப்படுத்தி கடுமையான கண்காணிப்பைத் தொடரவும் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.