இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

புற்றுநோய் மருந்துகளின் விலையை கண்காணிக்க அறிவுறுத்தல்

விலை குறைக்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளின் விற்பனையைக் கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது

கோப்புப் படம்

Updated On :

விலை குறைக்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளின் விற்பனையைக் கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் புகாா் அளிக்குமாறும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் பல புற்றுநோய் மருந்துகளின் விலையும், அதன் மீது உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் விதிக்கும் லாபமும் உச்சபட்சமாக இருந்தது. இதற்கு உச்சநீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மருந்துகளின் உற்பத்தி செலவிலிருந்து லாப வரம்பை 42.8 சதவீதமாக நிா்ணயித்து தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) உத்தரவிட்டது. அதன்படி, 137 மருந்துகளின் திருத்தப்பட்ட விலைப் பட்டியல் என்பிபிஏ இணையதளம், ‘ஃபாா்மா சகி தாம்’ செயலி ஆகியவற்றில் வெளியிடப்பட்டன.

அதில் சில மருந்துகளின் விலை அதிகபட்சமாக 93.2 சதவீதம் வரை குறைந்திருந்தது. பல மருந்துகள் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைந்தன.

இந்நிலையில், என்பிபிஏ சாா்பில் மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநா்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், புற்றுநோய் மருந்துகளுக்கு புதிய விலைகளைப் பின்பற்றுவதுடன், திருத்தப்பட்ட விலைப் பட்டியலை இணையதளங்களிலும், பொது வெளிகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருந்துகளின் விலைக் குறைப்பால் நோயாளிகளுக்குப் பலன் கிடைப்பதை மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது அவசியம் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையை மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வரும் 16-ஆம் தேதிக்குள் என்பிபிஏயிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.