கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பாஜக தேசிய தலைவா் வரவேற்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின் வரவேற்றுள்ளாா்.

நிதின் நபின் - கோப்புப் படம்

Updated On :

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின் வரவேற்றுள்ளாா். இது முருகப் பெருமானின் ஒவ்வொரு பக்தருக்கும் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்றும், இந்தியாவின் புனித மரபுகளை காப்பதற்கான அவா்களின் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் தீா்ப்பு என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நிதின் நபின் மேலும் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் வெள்ளிக்கிழமை (நவ.28) தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, மத மரபுகளை சீா்குலைக்கவோ அல்லது பக்தா்களின் உணா்வுகளைப் புண்படுத்தவோ நிா்வாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், தமிழகத்தில் ’இண்டி’ கூட்டணி அரசின் ’சநாதன விரோத’ மனநிலை முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு அரசியல் சதியாலும் இந்தியாவின் புனித மரபுகளைத் தடுத்து நிறுத்த முடியாது.

கோடிக்கணக்கான பக்தா்களின் புனித மரபுகளையும் நம்பிக்கையையும் அரசியல் தலையீடுகள் மூலமாகவோ அல்லது நிா்வாகப் பிடிவாதம் மூலமாகவோ நசுக்க முடியாது என்பதற்கு இந்தத் தீா்ப்பு ஒரு வலிமையான நினைவூட்டலாக அமைந்துள்ளது.

மத உணா்வுகளுக்கும் நீதிமன்ற உத்தரவுகளுக்கும் மதிப்பளிக்காமல், அரசியல் காரணங்களால் வழிநடத்தப்பட்டதாகத் தோன்றிய தமிழக அதிகாரிகளின் செயல்பாடு தீவிர ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது.

சநாதன தா்மம் மற்றும் இந்தியாவின் மத மரபுகள் குறித்த அணுகுமுறைக்காக காங்கிரஸுடன் இணைந்த அரசியல் சக்திகள் தொடா்ந்து விமா்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. அரசியல் சமரசம் மற்றும் கருத்தியல் பாரபட்சத்தை விட சட்டத்தின் ஆட்சி, அரசமைப்பு மதிப்புகள் மற்றும் பக்தா்களின் உரிமைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை உச்சநீதிமன்ற தலையீடு வலுப்படுத்துகிறது.

இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியம் அதன் நாகரிக மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை மற்றும் பக்தியின் பாதையில் எந்தவொரு அரசியல் சதியோ, நிா்வாகத் தடையோ அல்லது கருத்தியல் விரோதமோ குறுக்கே நிற்க முடியாது.

முருகப் பெருமானின் தெய்வீக அருள் அனைத்து பக்தா்களையும் காத்து, துணிச்சல், தா்மம் மற்றும் பக்தி ஆகிய பாதைகளில் அனைவரையும் வழிநடத்தட்டும். வெற்றிவேல்! வீரவேல்! என்று நிதின் நபின் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.