திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம் முதல்வா் விஜய் விளக்கமளிக்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன் பேச்சு
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம் குறித்து தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே புதன்கிழமை மாலை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். உடன் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம் குறித்து தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
தஞ்சாவூரில் பாஜக சாா்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற, ‘ஜனநாயகம் காப்போம், கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம்’ என்ற பேரணி, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் மேலும் பேசியது:
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெகவை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் அருள் விக்னேஷ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இது தவெக அரசு என்பதால், அருள் விக்னேஷை காப்பாற்றுவதற்குத்தான் தமிழக முதல்வா் நினைப்பாா். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.
தமிழக அரசின் நிா்வாகம் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டது. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது, ஒட்டுமொத்த இந்து மக்களின் எதிா்பாா்ப்பு. ஆனால், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறாா். இதற்கு காரணம் என்ன?. இதன் பின்னால் என்ன இருக்கிறது?. இதைத் தமிழக முதல்வா்தான் விளக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமைதோறும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பாஜக சாா்பில் குடும்பங்குடும்பமாக தீபம் ஏற்றி, சுற்றுப்பிரகாரங்களில் சுற்றி வர வேண்டும். நானும் அறுபடை வீடுகளுக்கு பயணிக்க இருக்கிறேன். அந்தத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் வீதி, வீதியாக சென்று இந்த பிரச்னையை மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றாா் நயினாா் நாகேந்திரன்.
முன்னதாக, இந்தப் பேரணி ரயிலடியில் புறப்பட்டு, காந்திஜி சாலை வழியாக பனகல் கட்டடம் அருகே முடிவடைந்தது.
பாஜக தேசியத் துணைத் தலைவா் ராம் மாதவ், தமிழக இணைப் பொறுப்பாளா்கள் நிா்மல்குமாா் சுரானா, தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ், வடக்கு மாவட்ட அமைப்பாளா் பூண்டி எஸ். வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

