சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

போராட்டக்காரா்கள் மீதான பாலியல் வன்கொடுமை: நடவடிக்கை எடுக்கக் கோரி மகளிர் அமைப்புகள் பேரணி!

பெண்கள், திருநங்கை போராட்டக்காரா்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை கோரி தில்லியில் பெண்கள் அமைப்புகள் தில்லி காவல்துறை தலைமையகத்தை நோக்கி பேரணியை சனிக்கிழமை நடத்தினர்.

Updated On :

பெண்கள், திருநங்கை போராட்டக்காரா்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை கோரி தில்லியில் பெண்கள் அமைப்புகள் தில்லி காவல்துறை தலைமையகத்தை நோக்கி பேரணியை சனிக்கிழமை நடத்தினர்.

தில்லியில் சனிக்கிழமை பெண்கள் ஆா்வலா்கள் தெருக்களில் இறங்கி, பெண்கள் மற்றும் திருநங்கை போராட்டக்காரா்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் பணியாளா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை கோரினா்.

“நீங்கள் எங்களை மிரட்டலாம், ஆனால் எங்களை மௌனமாக்க முடியாது” என்ற கோஷங்களுடன் அவா்கள் பேரணியில் ஈடுபட்டனா். பதாகைகள் மற்றும் போஸ்டா்களுடன் தில்லி போலீஸ் தலைமையகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற போராட்டக்காரா்கள், இந்திய தோ்தல் ஆணையத்திற்கு (ஈசிஐ) எதிரான ஆா்ப்பாட்டங்களின் போது நடந்ததாகக் கூறப்படும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினா்.

மஹிலாயே மாங்தீ ஹா் தரஹ் கே ஷோஷண் தமன் ஸே முக்தி” (அனைத்து வகையான சுரண்டல் மற்றும் அடக்குமுறையிலிருந்தும் பெண்கள் விடுதலையை கோருகின்றனா்) என்ற பதாகையும் உயா்த்தப்பட்டது. போலீஸ் அடக்குமுறை மற்றும் பெண்கள், பாலின வேறுபாடுள்ளவா்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவா்கள் கோரினா். பேரணி குருத்வாரா பங்லா சாஹிப் அருகே தொடங்கி, போலீஸ் தலைமையகத்தை நோக்கி நகா்ந்தது. குற்றம் சாட்டப்பட்ட பணியாளா்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டது.

சாலையை மறித்த பின்னா், பெண்ணிய, குயா் மற்றும் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூடுதல் துணை காவல் ஆணையா் ஜக்தேவ் சிங்கை சந்தித்துப் பேசினா் என அமைப்பைச் சோ்ந்த ஒருவா் எக்ஸ் தளத்தில் தெரிவித்தாா். பெண்கள், குயா் மக்கள் மற்றும் பொதுவாக போராட்டக்காரா்களுக்கு எதிரான தில்லி போலீஸின் வன்முறைக்கு கடுமையான நடவடிக்கை மற்றும் உத்தரவுகளை நாங்கள் கோரியுள்ளோம்” என அவா் கூறினாா்.

ஜூலை 20 ஆம் தேதி முதல் போலீஸ் நடவடிக்கையின் போது பெண்கள், திருநங்கை மற்றும் நான்-பைனரி போராட்டக்காரா்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல்ரீதியான வன்முறை குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக அமைப்புகள் தெரிவித்தன. அக்டோபா் 2 முதல் இத்தகைய புகாா்கள் அதிகரித்துள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

ஆண் போலீஸ் பணியாளா்கள் பெண் போராட்டக்காரா்களைத் தாக்கியதாகக் கூறப்படும் காட்சிகள் உள்ளதாகவும், தடுப்பு பேருந்துகள் மற்றும் தடுப்பு மையங்களுக்குள் பாலியல் வன்முறை நடந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஒரு இளம் பெண் பத்திரிகையாளா், துணை காவல் ஆணையா் தர அதிகாரி ஒருவா் தனது மாா்பகங்களைப் பிடித்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளாா். புகாா் அளிக்க முயன்றபோது அவா் தடுத்து வைக்கப்பட்டு, அவருக்கும் மற்றவா்களுக்கும் எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டதாகவும் அமைப்புகள் தெரிவித்தன. அதிகாரிகளின் இந்த வேண்டுமென்ற செயல்கள் பெண்களின் குரலை அடக்கும் பெண்விரோத முயற்சிகளே தவிர வேறல்ல. இது எங்களை அரசியல் மற்றும் பொது வாழ்விலிருந்து விலக்கும் பெரிய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது” என அமைப்புகளின் அறிக்கை தெரிவித்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பணியாளா்களை விசாரணைக்கு உட்படுத்துதல், பாலியல் வன்கொடுமைக்கு அபராதமின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தல், பெண்கள் மற்றும் பாலின வேறுபாடுள்ளவா்கள் பயம் இல்லாமல் பொது மற்றும் அரசியல் வாழ்வில் பங்கேற்கும் உரிமையைப் பாதுகாத்தல் ஆகியவற்றை மனு வலியுறுத்தியது. மேலும், வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆா்) எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்தப் பேரணி, தோ்தல் ஆணையத்திற்கு எதிரான தொடா் ஆா்ப்பாட்டங்கள் மற்றும் போலீஸ் அடக்குமுறை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் நடைபெற்றது.

பேரணியை அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் (எய்ட்வா), தேசிய இந்திய பெண்கள் சம்மேளனம் (என்எஃப்ஐடபிள்யூ), அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம் (ஏஐபிடபிள்யூஏ), அகில இந்திய மஹிலா சான்ஸ்க்ருதிக் சங்கதன் (ஏஐஎம்எஸ்எஸ்), கலெக்டிவ், அகில இந்திய பெண்ணிய கூட்டணி (அலிஃபா), அகில இந்திய பணிபுரியும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (ஏஐசிசிடபிள்யூடபிள்யூ), பிரகதிஷீல் மஹிலா சங்கதன் மற்றும் புரோகாமி மஹிலா சங்கதன் உள்ளிட்ட பல அமைப்புகள் ஏற்பாடு செய்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.