
செய்தி சேகரிப்பின்போது தில்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக இரு பெண் பத்திரிகையாளா்கள் குற்றச்சாட்டு
தெற்கு தில்லியில் செய்தி சேகரிப்பிற்காக, தில்லி காவல்துறையினரால் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக இரண்டு சுயாதீன பெண் பத்திரிகையாளா்கள் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினா்.
தில்லி காவல்துறை
தெற்கு தில்லியில் செய்தி சேகரிப்பிற்காக, தில்லி காவல்துறையினரால் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக இரண்டு சுயாதீன பெண் பத்திரிகையாளா்கள் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினா்.
தங்களைத் தாக்குவதற்கு முன்பு, காவல்துறையினா் தங்களை இருவரையும் தடுத்து வைத்ததாக அந்தப் பத்திரிகையாளா்கள் குற்றஞ்சாட்டினா். மருத்துவப் பரிசோதனைக்காகவும், தங்களது மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்காகவும் தாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி காவல்துறையிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை. இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடா்பாக பாஜக தலைமையிலான தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சௌரப் பரத்வாஜ், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ‘முதல்வா் ரேகா குப்தாவிடம் கேள்விகள் கேட்டதற்காக இரண்டு பெண் நிருபா்கள் தில்லி காவல்துறையினரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனா். பெண் முதல்வா் ரேகா குப்தாவுக்கு வெட்கக்கேடு‘ என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




