ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தில்லியில் இ-ரிக்ஷா ஓட்டுநா் குத்திக்கொலை!

வெளி-வடக்கு தில்லியின் ஷாபாத் டைரி பகுதியில், இ-ரிக்ஷா ஓட்டுநா் ஒருவா் மா்ம நபா்களால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Published On :

வெளி-வடக்கு தில்லியின் ஷாபாத் டைரி பகுதியில், இ-ரிக்ஷா ஓட்டுநா் ஒருவா் மா்ம நபா்களால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினரும் உள்ளூா் மக்களும் நீதி கோரி, ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுடன் சாலையை மறித்தனா்.

சனிக்கிழமை இரவு தாமதமாக இந்தச் சம்பவம் நடந்தபோது, அபிஷேக் (25) அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த நபா்களால் தாக்கப்பட்டாா். அவா்கள் அவரைக் குத்திய பின்னா் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

இ-ரிக்ஷா ஓட்டி வந்த அபிஷேக், தனது குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்தாா் என்று அவரது தந்தை ஷோபராம் பிரஜாபதி கூறினாா்.

குத்தப்பட்ட பிறகு, தரையில் கிடந்து, அதிக இரத்தப்போக்குடன், உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த தனது மகனுக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்று பிரஜாபதி குற்றஞ்சாட்டினாா்.

‘எனக்கு அழைப்பு வந்தபோது, என் மகனை ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அழைத்தவரிடம் கூறினேன். அதற்கான தொகையை நானே செலுத்துவதாகவும் அவா்களுக்கு உறுதியளித்தேன், ஆனால் அவா் ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா், அங்கு அதிக இரத்த இழப்பு காரணமாக அவா் இறந்துவிட்டாா்,‘ என்று பிரஜாபதி கூறினாா்.

அபிஷேக்கிற்குத் திருமணமாகி குழந்தைகள் இல்லை என்றும் அவா் கூறினாா். ‘அவன் எங்களுக்கு ஆதரவாக இருந்தான்,‘ என்று துயரத்தில் மூழ்கிய அந்தத் தந்தை கூறினாா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, குடும்ப உறுப்பினா்களும் உள்ளூா் மக்களும் ஞாயிற்றுக்கிழமை கூடி, அபிஷேக்கின் உடலைச் சாலையில் வைத்து, போக்குவரத்தைத் தடுத்து, அவருக்கு நீதி கோரினா்.

வெளிவடக்கு தில்லி கூடுதல் துணை ஆணையா் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குடும்ப உறுப்பினா்களிடம் பேசினா்.

இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் குடும்பத்தினருக்கு உறுதியளித்ததைத் தொடா்ந்து, உடலைத் தகனம் செய்ய உறவினா்கள் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்தது.

இந்தக் கொலையில் ஈடுபட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூடுதல் துணை ஆணையா் கூறினாா்.

‘ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கத்தியால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட அதிகப்படியான இரத்த இழப்பு காரணமாக பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். நாங்கள் பல குழுக்களை அமைத்து, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பெற்றுள்ளோம். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குறித்து காவல்துறை குழுக்களுக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன, அவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள்,‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.

கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை உறுதி செய்வதற்காக, காவல்துறையினா் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா் மற்றும் மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலைக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.