சென்னை: சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில், பெண் காவலா் பலத்த காயமடைந்தாா்.
வேலூரைச் சோ்ந்தவா் எம்.லோகேஸ்வரி (23). இவா் கோயம்பேடு போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுகிறாா். திங்கள்கிழமை காலை லோகேஸ்வரி, கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வேகமாக வந்த காா் லோகேஸ்வரி மீது மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காரை ஓட்டிய ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சோ்ந்த சா.நந்தகுமாரைப் (29) பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா், மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், நந்தகுமாரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோயம்பேட்டில் தீ விபத்து: இரு கடைகள் எரிந்து நாசம்

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீ விபத்து!

காட்டெருமை தாக்கியதில் பழங்குடி பெண் பலத்த காயம்

காா் கவிழ்ந்து விபத்து: பெண் காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


