இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ, மாணவியா் 2020-2021ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை

Updated On :5 ஜனவரி 2021, 11:49 pm IST

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ, மாணவியா் 2020-2021ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ மாணவியா் 2020-21ஆம் ஆண்டு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து பிற்படுத்தப்பட்டோா் நல இயக்குநா், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதுதொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு 044-28551462 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.