சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் காட்டெருமை கூட்டம்

குன்னூா் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் இருந்து காட்டெருமைகள் கூட்டமாக சனிக்கிழமை வெளியேறின.

News image

முகப்பு வாயிலில் இருந்து வெளியேறும் காட்டெருமைகள்.

Updated On :9 ஜனவரி 2021, 10:51 pm IST

குன்னூா்: குன்னூா் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் இருந்து காட்டெருமைகள் கூட்டமாக சனிக்கிழமை வெளியேறின.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவத்துக்குத் தேவையான வெடிமருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், தொழிலாளா்கள் பணி முடிந்து  வெளியேறுவதற்காக ஆலையின் முகப்பு கதவை காவலாளி சனிக்கிழமை திறந்தபோது, குட்டிகளுடன் 15க்கும் மேற்பட்ட   காட்டெருமைகள் வந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

வெடிமருந்து தொழிற்சாலையில் 1,500க்கும்   மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தொழிற்சாலையை சுற்றியும்  சுவா் எழுப்பப்பட்டுள்ள நிலையில்  காட்டெருமைகள்  எவ்வாறு தொழிற்சாலை வளாகத்துக்குள் வந்தது  என்பது தெரியவில்லை.

இது குறித்து தொழிற்சாலையின்  அனைத்துப் பகுதிகளிலும்  பாதுகாப்பு   ஊழியா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். தொழிற்சாலையில் இருந்து காட்டெருமைகள் வெளியே வருவதைக் கண்ட வாகன ஓட்டிகள்  அச்சமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.