எனக்குத் தெரிந்த எஸ்.வி.சேகர், ராதாரவி கண்ணியமானவர்கள்!

அதுவரையிலும் நாம் இங்கு நமது பெண்களுக்கு அவர்களது வேலைத்தளத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பெரிதாக எந்த விதமான எதிர்ப்பு மனநிலைகளையும் இன்றி தான் இருந்தோம்.
எனக்குத் தெரிந்த எஸ்.வி.சேகர், ராதாரவி கண்ணியமானவர்கள்!
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் மீடூ அலை ஓய்ந்து விட்டதா?

நடிகர் மோகன்லால் எவ்வளவு பெரிய மனிதர்?! மாநிலம் தாண்டி ரசிகர்களை வசீகரித்தவர். சமீபத்தில் மீடூ குறித்து அவரென்ன சொல்லி இருக்கிறார் என்றால்... மீடூ என்பது ஒரு ஃபேஷனாகி விட்டது. அது சீக்கிரம் காணாமல் போய்விடும் என்று கூறி இருந்தார். இதைக் கண்டு மலையாளப் பெண்ணிய அமைப்புகள் மட்டுமல்லாமல் மீடூ குறித்த புரிதல் கொண்டுள்ள ஒட்டுமொத்த தென்னிந்தியர்களுமே கூட தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.

கேரள நடிகை கடத்தல் விவகாரத்தின் பிறகே தென்னிந்தியாவில் மீடூ இயக்கத்தின் எழுச்சி தொடங்கியது என்று சொல்லலாம். 

அதுவரையிலும் நாம் இங்கு நமது பெண்களுக்கு அவர்களது வேலைத்தளத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பெரிதாக எந்த விதமான எதிர்ப்பு மனநிலைகளையும் இன்றி தான் இருந்தோம். அதது அவரவர் பாடு எனும் நிலையில் இருந்து மீண்டு மீடூ குறித்த புரிதலை உண்டாக்குவது அத்தனை எளிதாக இல்லை. ஒருவழியாக மீடூ குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களையும்... புரிதல்களையும் வெளிப்படுத்த முன் வந்த நிலையில் மிகப்பெரிய நடிகர்கள் முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் கூட மீடூ வை ஒரு அசூயையான விவகாரமெனும் வர்ணத்துக்குள் கொண்டு வர முனைவது பாதிக்கப்பட்ட பெண்கள் மனதில் மிகப்பெரிய ஏமாற்ற உணர்வை எழுப்புவதாக இருக்கிறது.

அந்த வகையில் மீடூ குறித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரபலங்கள் குறித்தும், தனியொரு பெண்ணாக சிங்கிள் மதராக இந்த சமூகத்தில் தான் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள், சமூகம் ஒரு தனித்த பெண்ணை உட்படுத்திப் பார்க்க விழையும் அவமானங்களுக்கு எதிராகப் போராடுவதற்கான தைரியத்தை தனக்குத்தானே முகிழ்க்கச் செய்யும் பிரயத்தனங்கள்... தனது போராட்டங்களுக்கு குடும்பத்தை சிரமத்திற்கு உட்படுத்தாது... இது எனது போர்... நானே.. நான் மட்டுமே இதை எதிர்கொள்வேன் எனும் திடம்... இப்படித் தனது நோ காம்ப்ரமைஸ் நிலைப்பாடுகள் ஒவ்வொன்றைக் குறித்தும் புவனா சொல்லிக் கொண்டே போகும் போது நமது சமூகத்தில் ஏற்பட்டாக வேண்டிய மாற்றங்கள் குறித்த அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேற இன்னும் எத்தனை மாமாங்கங்கள் ஆகுமோ எனும் நிராசை ஒரு பக்கம் இருந்தாலும் நிச்சயம் அதை அடைந்தே தீருவோம் என்று முழக்கமிடும் பெண்கள் மீதான மரியாதையும் கூடிக்கொண்டே செல்வதை மறுக்க முடியாது.

மேலும் பல நோ காம்ப்ரமைஸ் தொடர்களுக்காக தினமணி யூ டியூப் சேனலுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com