சுடச்சுட

  

  ‘பெண்களைப் பார்த்தா கையெடுத்து கும்பிடற மாதிரி இருக்கனும், கை தட்டி கூப்பிடற மாதிரி இருக்கக் கூடாது’

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 04th January 2019 04:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anuradha_thump_nail

   

  கர்நாடக இசைப் பாடகியும் நடிகையுமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி ஒரு தேர்ந்த பாரம்பரிய இசைக்குடும்பத்தின் 8 ஆம் தலைமுறை வாரிசு. இவர் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னரே இயக்குனர் கே.பாலசந்தர் மூலமாக சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். அறிமுகம் நேர்ந்ததும் கூட இசை தொடர்பான ஒரு மெகாத்தொடரில் தான். சிந்து பைரவி திரைப்படத்தின் தொடர்ச்சியை மெகாத்தொடராக்கும் முயற்சியில் இருந்த இயக்குனர் கே.பாலசந்தர் அதில் சிந்துவாக நடித்திருந்த சுஹாசினி கதாபாத்திரத்துக்கு பொருத்தமான புதுமுகம் தேடியிருக்கிறார். அவரது தேடுதலில் திடீரென அகப்பட்டவர் தான் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி. முன்பே இவரது தந்தையின் விசிறியாக இருந்த பாலசந்தருக்கு இவ்விஷயத்தில் சந்தோஷமே! அப்பாவின் இசைக்கு ரசிகராக இருந்ததோடு மகளின் நடிப்புக்கும் பிள்ளையார் சுழியிட்டதில் பாலசந்தரும் இவருக்கு ஒரு தந்தையானார். ‘சிந்து பைரவி’ தொலைக்காட்சிக்காக ‘சகானா’வாகி வெளிவந்தது. சிந்து கதாபாத்திரத்துக்கு அனுராதா நியாயம் செய்திருந்தார்.

  அனுராதாவுடனான முழுமையான நேர்காணலுக்கான லிங்க்...

   

  அனுராதா கிருஷ்ணமூர்த்தியுடனான இந்த நோ காம்ப்ரமைஸ் நேர்காணலில் கச்சேரியானாலும் சரி, சின்னத்திரை படப்பிடிப்புகளானாலும் சரி தன்னை எப்படி எக்ஸ்போஸ் செய்து கொள்ள அவருக்குப் பிடித்தமோ அவ்விதமாகவே அவர் தன்னை முன் வைத்து வந்திருக்கிறார். எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட வேண்டிய இடங்களில் எல்லாம் மிகத் தண்மையாக தனது மறுப்பைக் கூறவும் அவர் தயங்கியதாகத் தெரியவில்லை. தான் இப்படித்தான் இருக்க வேண்டும். நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. கச்சேரிகளில் அது கல்யாணக் கச்சேரி என்ற போதும் சினிமா பாடல்களைப் பாடுவதில்லை என்பன போனற பல நோ காம்ப்ரமைஸ் கொள்கைகளை அவர் மிகத்தெளிவாக முன் வைத்திருக்கிறார்.

  முழுநேர்காணலைக் காண்பவர்கள் மறவாமல் நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களையும், நிறைகுறைகளையும்  யூடியூப் தளத்திலோ அல்லது கட்டுரையின் கீழ் கமெண்ட்டுகளாகவோ பகிரவும்.

  இது போன்ற நேர்காணல் நிகழ்ச்சிகளைக் காண மறவாமல் தினமணி யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளவும்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai