/

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள் - தொகுப்பாசிரியர்: கோபிநாத் மொகந்தி- தமிழில்: ஆனைவாரி ஆனந்தன்; பக்.208; ரூ.125; சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

Updated On :22 ஜூலை 2013, 1:29 am IST

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள் - தொகுப்பாசிரியர்: கோபிநாத் மொகந்தி- தமிழில்: ஆனைவாரி ஆனந்தன்; பக்.208; ரூ.125; சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பில், மலைகளில் ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் வாழும் பழங்குடிகளின் ஜீவ மரண போராட்டங்களும், அங்கு வாழும் பெண்களின் சுய கௌரவமும், சங்கடமான நிலைமைகளும், சுதந்திரத்துக்குப் பிறகான ஒரிய கிராமப்புற வாழ்வில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களும் என்று பல கருப்பொருட்களைத் தாங்கி 13 அற்புதமான சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன.

உதாரணமாக, எறும்பு என்ற சிறுகதையில் ஓர் அதிகாரி அரிசி கடத்தலை முற்றிலுமாகத் தடுக்கும் பொருட்டு மலைக் கிராமத்தில் பல நாட்கள் நடந்து அங்குள்ள சந்தைக்கு வருகிறான். அரிசி கடத்தலைத் தடுக்கும் இந்த நடவடிக்கை தனது எதிர்காலத்திற்கும் புரமோஷனுக்கும் பயன்படும் என்று மிகுந்த முனைப்புடன் செயல்படத் துடிக்கிறான். ஆனால் அவன் செல்லும் வழி நெடுக மலைசாதி மக்களின் வாழ்க்கையைப் பார்க்கிறான். அவர்களுடைய பசியால் பஞ்சடைந்த அந்தக் கண்களை கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகிறான். ஓர் அதிகாரியின் மன நிலையிலிருந்து மாறி ஒரு நல்ல மனிதனாகத் தன் வழியில் நடக்கத் துவங்குகின்றான். இப்படி ஒவ்வொரு கதையும் தனி முத்திரை பதிக்கிறது.

நாம் அதிகம் அறிந்திராத ஒடிசா கிராமங்களின் ஊடே கதை நகர்ந்து செல்வது, ஒடிசா மீதான புதிய புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.