ஜெருசலேம் - அழியா நகரத்தின் கதை - பா. முருகானந்தம்; பக்.267; ரூ.210; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; 044-2813 2863
இன்றைய இஸ்ரேல் நாட்டின் தலைநகரமான ஜெருசலேம் நகரத்தின் ஏழாயிரம் ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைப் பேசும் நூல் இது. கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமி ஜெருசலேம் என்ற பொதுவான நம்பிக்கையை தகர்த்து முஸ்லீம்களுக்கும் ஜெருசலேம் ஒரு புண்ணிய பூமி என்பதை நூல் விளக்குகிறது.
இயேசு கிறிஸ்து இந்த நகரத்தில்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்பதால் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் புண்ணிய பூமி. அதேபோல், முகம்மது நபியின் வாழ்வில் "இரவுப் பயணம்' (முகம்மது நபி மற்ற இறைத் தூதர்களை சந்தித்த தருணத்திலும், அவர் வான் நோக்கிப் பயணித்து சொர்க்கத்தில் இறைவனைத் தரிசித்து உரையாடிவிட்டு பிறகு மீண்டும் கீழிறங்கிய நிகழ்வு) எனப்படும் முக்கிய நிகழ்வு நடந்ததாக நம்பப்படும் இடமும் ஜெருசலேம் என்பதால் இஸ்லாமியர்களுக்கு இது மெக்கா, மதீனாவுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது புண்ணிய பூமி ஆகிறது.
எகிப்து தேசத்திலே அடிமைப்பட்டு கிடந்த இஸ்ரேல் மக்களை இயேசு கிறிஸ்துவின் வல்லமையான வரங்களினால் மோசஸ் மீட்டு வனாந்திர வழியாக நடத்திக் கொண்டு கானான் தேசத்திற்கு வரும் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டு கால நிகழ்வு இந்த நூலில் ஒரு நாவல் போல எளிமையாக விளக்கப்பட்டு வாசிப்போரை ஈர்க்கிறது.
ஒன்பது சிலுவைப் போர்கள் குறித்து பேசும் இந்த நூல், அடுத்து நடைபெற்ற போர்களை கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மத ரீதியிலான போர்களே என்று விளக்குகிறது.
இறுதியாக, 20-ஆம் நூற்றாண்டில் யூதர்களும், முஸ்லீம்களும் அவரவருக்கென தனி நாடு அமைப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளும், இறுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனம் உருவானவிதமும் விளக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற போர்கள், பயங்கரவாத தாக்குதல்கள், பேச்சுவார்த்தைகள், வாக்குறுதி மீறல்கள் என ஒவ்வொரு சம்பவத்திலும் பாதிக்கப்பட்டது அப்பாவி மனிதர்கள் என்பதை நூல் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இந்நூல் ஒரு வரலாற்றுப் பெட்டகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


