வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை - ஆங்க் ஸ்வீ சாய்; தமிழில்: பெமினா; பக்.422; ரூ.320; அடையாளம், புத்தாநத்தம்; )04332-273444.

Updated On :23 பிப்ரவரி 2014, 6:13 pm

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை - ஆங்க் ஸ்வீ சாய்; தமிழில்: பெமினா; பக்.422; ரூ.320; அடையாளம், புத்தாநத்தம்; )04332-273444.

மலேசியாவில் உள்ள பினாங்கைச் சேர்ந்த மருத்துவரான ஆங்க் ஸ்வீ சாய், பிரிட்டனில் உள்ள செயின்ட் பர்தோலோமியூ மருத்துவமனையில் தற்போது பணியாற்றுகிறார். 1982 இல் பெய்ரூத் நகர் மீது இஸ்ரேலியப் போர் விமானங்கள் தொடர்ந்து நடத்திய தாக்குதல்களை தொலைக்காட்சியில் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பெய்ரூத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய அங்கு சென்றார். பாலஸ்தீன மக்கள் படும் துன்பங்களை நேரில் கண்டு இந்நூலை அவர் எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிடும் சம்பவங்கள் நம்மை உருக வைக்கின்றன. உதாரணமாக, "ஒரு நாள் இரவு தாய்மார்கள் தண்ணீர் பிடிக்க வெளியே சென்றார்கள். எப்போதும் தோட்டாக்கள் பாயும் திறந்த வெளியில் அந்தக் கிணறு இருந்தது. தண்ணீர் பிடிக்க வெளியே செல்லும் முன்பு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை முத்தமிட்டு விடை பெறுவார்கள். காரணம், திரும்பவும் அவர்களைப் பார்க்க முடியுமென்பது நிச்சயமில்லை என்கிற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. அன்றிரவு வெளியே சென்ற பத்துப் பெண்களில் நால்வர் மட்டுமே திரும்பினார்கள். மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்'. பெண்கள் தண்ணீர் பிடிக்கச் செல்வதே உயிரைப் பணயம் வைக்கும் செயலாகிவிட்டது நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. ""பாலஸ்தீன - இஸ்ரேல் மோதல்களுக்குக் காரணம், பாலஸ்தீன நாட்டை அழித்து, அதன் மக்களை விரட்டியடித்துத்தான் இஸ்ரேல் என்கிற நாட்டை உருவாக்க முடியும் என்ற தவறான எண்ணம்தான்'' என்கிறார் நூலாசிரியர். பாலஸ்தீன மக்களின் போராட்டத்தைத் தெரிந்து கொள்ள உதவும் சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.