காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

நெஞ்சில் மலர்ந்த பூக்கள்

நெஞ்சில் மலர்ந்த பூக்கள் - நாகை ஜி. அஹ்மது; பக். 256; ரூ.100; நூல் கிடைக்குமிடம்: 17/34, சியா மரைக்கார் தெரு, நாகூர்-22; )044-25225143/ 99443-13680.

News image
Updated On :27 ஜூலை 2014, 6:42 pm

நாகை ஜி. அஹ்மது

நெஞ்சில் மலர்ந்த பூக்கள் - நாகை ஜி. அஹ்மது; பக். 256; ரூ.100; நூல் கிடைக்குமிடம்: 17/34, சியா மரைக்கார் தெரு, நாகூர்-22; )044-25225143/ 99443-13680.

பல்வேறு இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இஸ்லாமியக் கருத்துகளை அனைத்து சமூக மக்களுக்கும் மிக எளிமையாகப் புரியும் வண்ணமும், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஆழ்ந்த கருத்துகளை நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். உதாரணமாக, "அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு' என்ற முதல் கட்டுரையில் இந்தியாவின் சிறந்த ஆட்சியாளரான ஒளரங்கசீப், இறந்தவுடன் அவருடைய மனைவி, சதி எனும் உடன்கட்டையில் ஏறி உயிர் துறக்கும் இந்துமத மூட நம்பிக்கையைத் தடை செய்ததும், அதன் பின்னர், வங்காள தேசத்தைச் சேர்ந்த ராஜாராம் மோகன்ராய் இக்கொடிய பழக்கத்தை எதிர்த்து பெண்டிங் பிரபுவுடன் இணைந்து அதற்கு எதிரான சட்டம் கொண்டு வந்ததையும், இஸ்லாம் பெண் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பதை, கற்பது ஆண்-பெண் மீதான கட்டாயக் கடமை என்ற நபி மொழியின் மூலமும், ஆயிஷா ரலி அல்லாஹ் அன்ஹா அதிகமான நபி மொழிகளை அறிந்து கல்வியில் திறமையானவராக திகழ்ந்ததைப் பதிவுசெய்து பெண் கல்விக்கு உற்சாகம் அளித்துள்ளார்.

இஸ்லாம் மார்க்கம் போதிக்கின்ற எண்ணற்ற நற்பண்புகளை திருக்குர்ஆன் வசனங்கள் மூலமும், நபிமொழிகள் மற்றும் கலீபாக்கள் வரலாறுகளில் இருந்தும் சிறந்த எடுத்துக்காட்டுகளைத் தந்திருப்பது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.