தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை - ஆர்.நல்லகண்ணு; பக்.152; ரூ.100; வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், சென்னை-94; )044- 2361 1311.
தமிழ்நாட்டின் நீர் வளம் பற்றி பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டுள்ள நூல்.
கங்கை - காவிரி இணைப்பு, காவிரி நீர்ப் பிரச்னை, முல்லை - பெரியாறு அணைப் பிரச்னை, தமிழகத்தை 1977 ஆம் ஆண்டு தாக்கிய புயல், வெள்ள சேதங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் என நீர் வளம் பற்றிய எல்லாப் பிரச்னைகளையும் நூல் தெளிவாகவும், விரிவாகவும் ஆராய்கிறது. எளிமையாக விளக்குகிறது.
கங்கை - காவிரி இணைப்பு சாத்தியமில்லை என்று கூறப்பட்டாலும், ஒரிசாவிலுள்ள மகாநதியுடன் தென் இந்திய நதிகளான கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணியுடன் அதை இணைக்க முடியும் என்கிறார் நூலாசிரியர்.
மழையின் அளவைத் தமிழ்நாட்டில் அதிகரிப்பதற்கு, மலைகளில் பெரிய மரங்களைப் பாதுகாக்கவும், காடுகளை வளர்ப்பதற்கும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். குறைந்தது பத்தாண்டுகளுக்காவது மரங்களை வெட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.
மத்திய அரசு அறிவித்த "தேசிய தண்ணீர்க் கொள்கை 2012' என்பது நீர்நிலைகளையும், நிலத்தடி நீர் நிரம்பிய செழிப்பான நிலங்களையும் தனியார் ஆதிக்கத்துக்கு விட்டுவிட மறைமுகமாகத் தீட்டப்படும் திட்டம் என்று எச்சரிக்கும் நூல். நீர் வளம் பேண நினைக்கும் எல்லாருடைய கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

'பிரதமர் மோடி தூங்கமாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!

பார்க்கிங் பகுதியில் ‘பிளேடு’ சைக்கோ! பைக் சீட்டுகளை கிழித்தெறிந்து அட்டகாசம்!

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


