ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சிறகை விரி, பற!

சிறகை விரி, பற! - பாரதி பாஸ்கர்; பக்.135; ரூ75; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-2852 4074

Published On :

சிறகை விரி, பற! - பாரதி பாஸ்கர்; பக்.135; ரூ75; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-2852 4074

"தெளிவான சிந்தனை, தேர்ந்த சொல்லாட்சி, வளமான தமிழ் நடை, வலிமையான வார்த்தைகள், எளிய உவமைகள், ஏராளமான நகைச்சுவை, மெலிதான அங்கதம், மேன்மையான தகவல்கள்... ஊடும் பாவுமாக விரவிக் கிடக்கும் இந்த நூலை வாசிப்பவரின் மனம் சிறகை விரித்து ஆன்மிக வெளிகளில் மெல்லப் பறக்கத் தொடங்குகிறது' - இப்படி வாழ்த்துகளுடன் விமர்சித்திருப்பவர் பட்டிமன்றப் பேச்சாளர் எஸ்.ராஜா.

தன் சுய அனுபவங்களுடனான வாழ்வியல் பதிவுகளை ஆன்மிகம் என்ற தேன் கலந்து பருகத் தந்துள்ளார். நூலாசிரியர் பார்த்த, கேட்ட, பகிர்ந்த, அனுபவித்த, உணர்ந்த நிகழ்வுகளே இதில் பதிவாகியுள்ளன. இரண்டு பக்கங்களில் 200 பக்கங்களுக்கான செய்தியைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிடுகிறார்.

÷குரு-சிஷ்யன் உறவுக்கு ஒரு திரைப்படத்தை மேற்கோள்காட்டி, ஒரு கிழவியிடம் பெற்ற ஞான பாடத்தைக் கொண்டு பாரதியார் சுதேசமித்திரனில் எழுதிய கதை - தத்தாத்ரேயர் வடிவில் பரிமளிக்கிறது. மனதை நெகிழ வைக்கும் பத்திகள், உறைய வைக்கும் செய்திகள், வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை, இறைவனைத் தரிசிக்க வைக்கும் ஸ்லோகங்கள், நம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை

அசைபோட வைக்கும் வகையில் அமைந்த வரிகள் - இப்படி 31 கட்டுரைகளுக்குள் இருப்பவை ஏராளம்... ஏராளம்...

÷புராணம், இதிகாசம், வரலாறு போன்றவற்றை இன்றைய சமூகச் சூழ்நிலையோடு கொண்டு சென்று, சுட்டிக்காட்டி விளக்கும் ஒரு சங்க-நவீன இலக்கியமாக இந்நூல் திகழ்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.