விண்வெளி நாட்குறிப்புகள்

விண்வெளி நாட்குறிப்புகள் - நெல்லை சு.முத்து; பக்.184; ரூ.180; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; )044-2434 2810.
Updated on
1 min read

விண்வெளி நாட்குறிப்புகள் - நெல்லை சு.முத்து; பக்.184; ரூ.180; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; )044-2434 2810.

"வான்வெளி கன்னங்கரேல் என்று மிக, மிக இருட்டாகத் தெரிகிறது. பூமியோ நீல நிறத்தில் அழகாய் இருக்கிறது' விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதனான யூரி காகரின் வார்த்தைகள்தான் இவை.

அவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 1961, ஏப்ரல் 12 என்ற இந்த நாள் விண்வெளித் துறையில் இன்றளவும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இதே நாளில், விண்வெளி விமானத்துடன் கூடிய முதலாவது விண்வெளி ஓடம் - கொலம்பியா - 1981 இல் ஏவப்பட்டுள்ளது.

இதுபோல், விண்வெளி தொடர்பான ஏராளமான பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வந்துள்ளது விண்வெளி நாட்குறிப்புகள் புத்தகம்.

ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஓர் ஆண்டின் அனைத்து நாள்களிலும் விண்வெளி சாதனைகளை நாட்காட்டி வடிவில் தொகுத்து வழங்கியிருக்கிறார் நெல்லை சு.முத்து. இவர் இஸ்ரோவில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாகப் பணியாற்றியவர்.

எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய தினம் (ஜூலை 18, 1979), முதன் முதலாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட்ட தினம் (செப்டம்பர் 20, 1993) சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்ட தினம் (அக்டோபர் 22, 2008), நிலவில் நீர் இருப்பதாக சந்திரயான்-1 கண்டறிந்த தினம் (செப்டம்பர் 24, 2009) போன்ற இந்திய விண்வெளித் துறையில் முக்கியமான நாள்கள் குறித்தும் ஏராளமான குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

விண்வெளி ஆர்வலர்களும், மாணவர்களும் இந்தப் புத்தகத்தை நிச்சயம் வாசிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com