காலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய - ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும்) - பழ. நெடுமாறன்; பக்.708; ரூ.800; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,சென்னை- 98; )044- 2624 1288.
முப்பது ஆண்டு கால உழைப்பு. அசாத்தியமான தேடலுடன் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ள, பாராட்டுதலுக்குரிய நூல். மூன்றுவித தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கருவூலம் போன்றது இது.
அதாவது;
1. ரஷிய-இந்திய அரசியல் வரலாற்றுத் தொடர்புகள் குறித்தான தேடல்,
2. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு வளர்ந்தது, இதை வளர்த்தவர்கள் யார்,யார் என்கிற தேடல்,
3. கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்றபோதிலும் பொதுவுடைமையை வரவேற்ற இந்திய ஆளுமைகள் குறித்த தேடல் இருந்தும், ஆங்கிலத்தில் அதிகப் புலமை இல்லாத தமிழர் அனைவருக்கும் இந்த நூல் "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்' போன்றது.
இந்த உழைப்புடன் நூலாசிரியர் இதை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், இது இந்நேரம் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பெரிதாகப் பாராட்டப்பட்டிருக்கும்.
இந்த நூலின் குறைகள் மூன்று. அவை நூலாசிரியர் பற்றியது அல்ல. பதிப்பகம் சார்ந்தது.
1. முப்பது ஆண்டுகளாக எழுதப்பட்ட நூல். அதன் மொழிநடை, சொல் பயன்பாடு ஆங்காங்கே மாறவே செய்யும். இதை "காபி எடிட்டிங்' மூலம் சீர் செய்திருக்க வேண்டும்.
2. மிக அரிதான, முரண்பாடு ஏற்படக் கூடிய அல்லது கூடுதல் விவரங்களைத் தேடும் ஆர்வத்தை ஈடு செய்யக் கூடிய இனங்களில் மட்டுமே அடிக்குறிப்பு தேவை. ஆனால் இந்த நூலில் ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒரே நூலின் பெயரை பல முறை (13, 14 முறைகூட) அடுக்கிக்கொண்டே போகும்போது, அந்த அத்தியாயம் முழுமையும் அந்த நூலுக்குரியது என்பதான தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது.
3. பெட்டிச் செய்திகள் இப்புத்தகத்தின் தீவிரத்தன்மையைக் குறைத்துவிடுகின்றன, அவை சுவாரஸ்யமான தகவல்கள் என்றபோதிலும்! தவிர்த்திருக்கலாம். அல்லது கடைசியில் பின்னிணைப்பாகச் சேர்த்திருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


