இந்த நதி நனைவதற்கல்ல - தமயந்தி; பக்.164; ரூ. 130; பிரக்ஞை வெளியீடு, சென்னை-17; 044-2434 2771.
ஒரு பெண், தன் வாழ்க்கையில் தொடர்புடைய பெண்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, சமூகப் பார்வையோடு ஆராய்வதே "இந்த நதி நனைவதற்கல்ல'. சட்டங்களாலும், நீதிமன்றங்களாலும் தடுத்து நிறுத்த முடியாத பெண்களின் மீதான வன்முறை குறித்து பேசும் நூலாசிரியர், தனது ஒவ்வொரு கட்டுரையிலும் தான் படித்த, சந்தித்த பெண்களின் பிரச்னைகளைத் தன் உக்கிரமான சொல்லாடலால் உணர வைக்கிறார். வாசகரின் மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கிறார்.
மறக்கப்பட்ட வழக்குகள், சமூக அதிகாரக் கட்டமைப்புகள், குடும்பம் முதல் பொது அரங்கு வரை பெண்கள் சந்திக்கும் சவால்கள், பிரச்னைகளைக் கூறும் இந்நூல், ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. இரண்டாம் பகுதியில் நீதி மறுக்கப்பட்ட பெண்களின் வழக்குகளும், சினிமா நாயகிகளின் கதாபாத்திர வடிவமைப்பும், ஆண்- பெண் உறவு நிலைக்குழப்பங்கள் குறித்தும் விவாதிக்கும் ஆசிரியர், இதற்கான தீர்வுகள் என்னவாக இருக்கும் என்பதைச் சிந்திக்க வைக்கிறார். யாரும் கையிலெடுக்கத் தயங்கும் பிரச்னைகளைத் துணிந்து விவாதிப்பதன் மூலம், ஒவ்வொரு வாசகனின் மனதிலும் பெண்ணியச் சார்பு சிந்தனைகளைச் செதுக்குகிறது இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


