10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - அ.கி. பரந்தாமனார்; பக்:496; ரூ160; அல்லி நிலையம், 28/19 முத்து முதலி தெரு, வேப்பேரி அஞ்சல், சென்னை -7.

News image
Updated On :5 ஜூன் 2017, 1:44 am IST

நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - அ.கி. பரந்தாமனார்; பக்:496; ரூ160; அல்லி நிலையம், 28/19 முத்து முதலி தெரு, வேப்பேரி அஞ்சல், சென்னை -7.
நாம் அன்றாடம் நாளேடுகளில் படிக்கும் செய்திகள் மற்றும் கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றில் ஏதேனும் சில பிழைகள் கண்களில் படக்கூடும். சில செய்திகளில் உள்ள சொற்றொடர்கள் சரியா, தவறா என்ற குழப்பம் ஏற்படும். நாம் சரி என நினைப்பதும், தவறு என நினைப்பதும் சரிதானா என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது? அதற்கு உதவுவதுதான் இந்நூல்.
கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய அ.கி. பரந்தாமனார் ஒரு நாளேட்டில் வாரம் ஒருமுறையென தொடர்ந்து நான்கு வருடங்கள் எழுதியதன் தொகுப்பே இந்நூல்.
இதில் தமிழ்மொழி குறித்த சுருக்க அறிமுகம், உரைநடை வளர்ந்த விதம், எழுத்தியல், சொல்லியல், வினையியல், இடையியல், உரியியல் போன்றவற்றுக்கான தனித்தனி விளக்கங்கள், வலி மிகுதல், சந்தி விதிகள், வாக்கிய வகைகள், நிறுத்தக் குறிகள், பொருளணிகள் - இப்படித் தமிழின் எல்லாப் பிரிவுகள் குறித்தும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள், முதலில் வராத எழுத்துகள், இடையில் வராத எழுத்துகள், சொல்லுக்கு இறுதியில் வராத எழுத்துகள் போன்றவை எளிய உதாரணங்களோடு விளக்கப்பட்டுள்ளன. மேலும் முதல் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரை உதாரணத்தோடு விளக்கியிருப்பது எழுத்தாளர்களுக்கே மிகவும் பயன்படக்கூடியது.
பொதுவாக இலக்கணங்களை விளக்கும் நூல்கள் எளிமையாக இருப்பதில்லை. ஆனால் இந்நூல் ஒரு விதிவிலக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.