எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

டேவிட்டும் கோலியாத்தும்

டேவிட்டும் கோலியாத்தும் - மால்கம் கிளாட்வெல்; தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் பக். 352 ரூ.300; சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ். சென்னை-17; )044-2434 2771.

News image
Updated On :13 மார்ச் 2017, 3:23 am IST

டேவிட்டும் கோலியாத்தும் - மால்கம் கிளாட்வெல்; தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் பக். 352 ரூ.300; சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ். சென்னை-17; )044-2434 2771.
பின்தங்கியவர்கள், பொருந்தாதவர்கள் எனக் கருதப்படுவோர் - பேராற்றல் வாய்ந்தவர்களாகக் கருதப்படுவோரை, தங்களது போராட்டத்தின் மூலம் எதிர்கொண்டு, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள் என்ற கருத்தை பல்வேறு உண்மை நிகழ்வுகளை உதாரணம் காட்டி இந்நூல் விளக்குகிறது .
முதலாம் உலகப் போரின் முடிவில், அரேபியாவை ஆக்கிரமித்திருந்த துருக்கியின் வலிமையான ராணுவத்தை, முறையான போர் உத்திகளை அறியாத பழங்குடியின மக்களைக் கொண்டு வீழ்த்திக் காட்டிய டி.இ.லாரன்ஸ், டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட டேவிட் பெளவீஸ் தனது உற்றுக் கேட்கும் உத்தியைப் பயன்படுத்தி சிறந்த வழக்குரைஞராக மாறியது, கூடைப்பந்து விளையாடிய அனுபவமே இல்லாத மும்பையைச் சேர்ந்த விவேக் ரணதிவே, அமெரிக்காவில் ரெட்வுட் சிட்டி அணிக்காக பயிற்சியளித்து சாதனை படைக்கச் செய்தது என நிறைய உதாரணங்கள்.
ஏதோ ஒரு வகையில் வரும் தடைகளால், எதையும் சாதிக்க முடியாது என்ற மனநிலை ஏற்படுவதற்கு சவால் விடுகிறார் நூலாசிரியர். பலவீனத்தையே பலமாக மாற்றுதல், ஒதுக்கிவைக்கப்பட்டதற்கான காரணத்தையே கவனிக்க வைக்கும் விஷயமாக மாற்றுதல் என மாற்றுச் சிந்தனையுடன் அணுகி வெற்றி பெற்றவர்களின் கதைகளின் தொகுப்பு இந்நூல். அனைவருக்கும் உந்துசக்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.