மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பர்மாவும் தமிழர்களும்

பர்மாவும் தமிழர்களும் - மாத்தளை சோமு; பக்.200; ரூ.180'; தமிழ்க் குரல் பதிப்பகம், 10, புலிபோன் பஜார், இரண்டாவது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. 

News image
Updated On :26 நவம்பர் 2017, 7:15 pm

மாத்தளை சோமு

பர்மாவும் தமிழர்களும் - மாத்தளை சோமு; பக்.200; ரூ.180'; தமிழ்க் குரல் பதிப்பகம், 10, புலிபோன் பஜார், இரண்டாவது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. 
பர்மாவுடன் தமிழர்களுக்கு நெடிய உறவு இருந்ததுடன், முன்னொரு காலத்தில் அங்கு தமிழர்கள் உயர்நிலையில் வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள். பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்றிருந்த காலத்தையும், அவர்களின் வாழ்க்கை பின்னாளில் தாழ்ந்ததையும் விவரிக்கும் இந்நூல், இன்னொருபுறத்தில் பர்மாவின் வரலாற்றைக் கூறும் நூலாகவும் உள்ளது. 
1826 இல் பர்மாவில் தமிழர்கள் குடியேறியதாகச் சொல்லப்பட்ட போதிலும், 1852 ஆம் ஆண்டு கீழை பர்மாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகுதான் அதிக அளவில் தமிழர்கள் பர்மாவில் குடியேறினர். அதற்கு முன்பு வாணிகம் செய்யச் சென்ற தமிழர்கள் இரங்கூனில் வசித்தனர்.
1930 ஆம் ஆண்டளவில் இரங்கூனில் 82.8 சதவீதமான வங்கிகளும், வட்டித் தொழில்களும் இந்தியர்கள் (நகரத்தார்) வசமிருந்தன. 1869 இல் பர்மாவில் போடப்பட்ட ரயில் பாதைகளுக்காக உழைத்தவர்கள் தமிழர்கள். 
இரங்கூனில் "ஜோதி' என்ற மாத இதழை நடத்தி வந்தவர் தமிழறிஞர் வெ.சாமிநாத சர்மா. 
1948 இல் பர்மாவில் உருவாக்கப்பட்ட அயல்நாட்டார் சட்டத்தால், 10 ஆயிரம் இந்தியர்களுக்கு மட்டுமே குடியுரிமை கொடுக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் வேலை செய்த தமிழர்கள் பதவிகளை இழந்தார்கள். 
தற்போது பர்மாவில் உள்ள இளம் தலைமுறை தமிழைப் படிக்கவில்லை. பர்மியத் தமிழர்களுக்கு தமிழ் படிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் "இளந்தமிழர் இயக்கம்' போன்ற அமைப்புகள் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு பர்மாவுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பை விரிவாக இந்நூல் விளக்குகிறது. சிறந்த ஆவணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.