திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி - பொன்.செல்லமுத்து; தொகுதி: 1- பக்.240; ரூ.250; தொகுதி: 2- பக்.256; ரூ.250; தொகுதி: 3- பக்.240; ரூ.250; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; 044- 2536 1039.
கவிஞர் வாலி 1959 முதல் 2013 வரை திரைப்படங்களில் எழுதிய பாடல்கள் தொடர்பான தகவல்களின் களஞ்சியமாக இந்த மூன்று தொகுதிகளும் இருக்கின்றன. 1959 முதல் 1980 வரை 297 படங்களுக்கும், 1981 முதல் 1990 வரை 405 படங்களுக்கும், 1991 முதல் 2013 வரை 372 படங்களுக்கும் கவிஞர் வாலி பாடல்கள் எழுதியிருக்கிறார். இந்த பாடல்கள் இடம் பெற்ற திரைப்படங்கள், அவற்றைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், திரைப்படம் வெளிவந்த ஆண்டு, அந்த திரைப்படங்களில் நடித்த நடிகர்கள், பாடல்களைப் பாடிய பாடகர்கள் எனப் பாடல்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இத்தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன.
கவிஞர் வாலி பாடல்கள் எழுதிய திரைப்படங்களில் பிற கவிஞர்கள் பாடல்கள் எழுதிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
பாடல் எழுதும்போது இசையமைப்பாளர்களுக்கும் கவிஞர் வாலிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள், சம்பவங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. வாலி எழுதிய பாடல்களில் காணப்படும் தமிழ் யாப்பிலக்கணக் கூறுகள் பற்றியும் நூலாசிரியர் எழுதியிருப்பது வியப்பளிக்கிறது.
கவிஞர் வாலி எழுதி மக்கள் மனதில் இடம் பெற்று முத்திரை பதித்த பாடல்கள் எவை? கவிஞர் வாலி எழுதிய நூல்கள், நாடகங்கள், கதை - வசனம் எழுதிய திரைப்படங்கள், அவர் நடித்த திரைப்படங்கள், வாலியைப் பற்றி பிறர் எழுதி வெளிவந்த நூல்கள் என கவிஞர் வாலி குறித்த தகவல்களை பல்வேறு விதங்களில் இந்நூல் தொகுத்தளிக்கிறது.
தமிழ்த் திரைப்படம் தொடர்பாக ஆய்வு செய்பவர்கள், திரைப்பட ஆர்வலர்கள், இளம் பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவருக்கும் பயன்படக் கூடிய வகையில் இத்தொகுதிகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்துக்கு எருமைகள் கடத்தல்: 4 பேர் கைது!

ஃபின் ஆலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 248 ரன்கள் இலக்கு!

போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண்

மத்திய கல்வி அமைச்சரைப் பதவிநீக்கம் செய்க: பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

