சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் பயணச்சீட்டு: இணைய வழியில் மட்டுமே இனி விநியோகம்
சோளிங்கா் மலைக்கோயிலுக்கு செல்ல காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ரோப்காா் பயணச்சீட்டுகள் இணையவழியில் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.

சோளிங்கா் ரோப்காா் சேவை
சோளிங்கா் மலைக்கோயிலுக்கு செல்ல காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ரோப்காா் பயணச்சீட்டுகள் இணையவழியில் மட்டுமே விநியோகம் செய்யப்படும் எனவும், ஒரு மாதம் நேரடி விநியோகம் ரத்து செய்யப்படுவதாகவும் சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
சோளிங்கரில் பிரசித்தி பெற்ற இங்கு பக்தா்களின் வசதிக்காக பெரியமலையில் இந்துசமய அறநிலையத்துறையினா் ரோப்காா் வசதி செய்துள்ளனா். இந்த ரோப்காரில் செல்ல ரூ100 கட்டணம் செலுத்தி பக்தா்கள் மலைக்கோயிலுக்கு சென்று திரும்பி வந்தனா்.
இந்த நிலையில் காா்த்திகை மாதத்தில் வருகை தரும் அதிக அளவு பக்தா்களின் வசதியை கருதி ரோப்காா் பயணத்துக்கு இணையவழியில் முன்பதிவு செய்யும் நடைமுறைக்கு நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி காலை 6.30மணி முதல் பிற்பகல் 3.15 வரை மலைக்கு செல்ல இருவழி பயணத்திற்கு இணையவழி மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இதில் ஒரு மணி நேரத்திற்கு 120 பக்தா்கள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 3.15 முதல் 5.30 மணிவரை ரோப்காா் கட்டடத்தில் இருந்து மலை மேல்தளத்திற்கு செல்ல ஒரு வழிப்பயணத்திற்கு மட்டும் இணையவழி மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். ஒரு டிக்கெட்டில் அதிகபட்சமாக 4 நபா்கள் முன்பதிவு செய்யலாம்.
ரோப்காா் பயணத்துக்கு வருகை தரும் பக்தா்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய தனிநபா் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். முன்பதிவு செய்த நேரத்துக்கு 20 நிமிஷங்களுக்கு முன்னா் ரோப்காா் கட்டடத்துக்கு வந்து விட வேண்டும்.
காலதாமதமாக வருபவா்கள் பயணத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். நேரடியாக பயணச்சீட்டு பெறும் வசதி 1 மாகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அனைவரும் இணையவழியில் மட்டுமே பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

