பால் டம்ளர்
பால் டம்ளர் -தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் - மொழிபெயர்ப்பு: ராஜி ரகுநாதன்; பக்.232; ரூ.150/-கனவு வெளியீடு, திருப்பூர் - 641602.


பால் டம்ளர் -தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் - மொழிபெயர்ப்பு: ராஜி ரகுநாதன்; பக்.232; ரூ.150/-கனவு வெளியீடு, திருப்பூர் - 641602.
துரகா ஜானகிராணி, வாரணாசி நாகலட்சுமி, முக்தேவி பாரதி, ஜ்யோதி வலபோஜு, பத்மலதா ஜெயராம் நந்திராஜு, பொத்தூரி விஜயலட்சுமி, ஷோபா குரஜாட பெரிந்தேவி உள்ளிட்ட ஏழு பெண் எழுத்தாளர்கள் எழுதிய 21 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
"பால் டம்ளர்' கதையில் வரும் (சொரூப) ராணி ஒரு வேலைக்காரச் சிறுமி என்றாலும், அவளுக்கிருக்கும் தனித்தன்மையை அவள் மூலமே விளக்கியிருப்பது சிறப்பு. அவளுக்கு எஜமானி டீ தருகிறாள். ராணி அதை மறுத்து பால் கேட்கிறாள். "வேலைக்காரிக்கு பால் தருவதா?' என்று எஜமானி யோசிக்கிறாள். பின்னர் பால் குடிப்பதற்கான காரணத்தை அவள் கூறுவதும், அதைக் கேட்டு எஜமானியம்மாள் அதிர்வதும் சுவையான காட்சி.
ராணி பள்ளிக்குச் சென்றபின், அடுத்து வந்த வேலைக்காரப் பெண்ணுக்கு எஜமானி வலிய வந்து பால் கொடுத்தாலும் "வேண்டாம்' என்று அவள் மறுப்பது சுவையான திருப்பம்.
"ரோஜா' சிறுகதையில் சுமா என்ற இளம்பெண் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆகிறாள். வாழ்வில் தவறிப்போன இளம் பெண்ணுக்கு வழங்கப்படும் சிறப்பான அறிவுரை இதில் அடங்கியுள்ளது; பிறகு வேறு ஓர் இளைஞருடன் திருமணம் நடப்பதும், அவர்களுக்கும் குழந்தை பிறந்தது - முதல் குழந்தையோடு - அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதும் சித்திரிக்கப்பட்டுள்ளன. அவள் நேர்மறை சிந்தனையோடு வாழ வழிகாட்டிய அவளது தாயாரின் தோழி ஜானகியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்துகள்.
"இப்படியும் ஒரு அன்னை' சிறுகதையில் கால் ஊனமுற்ற பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்காமல் அவளின் சம்பளத்தில் வாழும் சுயநல பெற்றோரை சுட்டிக் காட்டுவது சமூக அவலத்தின் அடையாளம். "விடிவெள்ளி முளைத்தது', "ஆபத்துக்கு பாவமில்லையா?', "காதில் விழாத ராகம்', "எரிமலைச் சாம்பல்கள்' இப்படி ஒவ்வொரு கதையும் சமூகத்தில் நிலவும் பலவிதமான பிரச்னைகளைச் சித்திரிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...