வானகம் இங்கு தென்பட வேண்டும் - எஸ்.கிருஷ்ணஸ்வாமி; பக்.464; ரூ.470; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; 044-24641314.
டாக்டர் கிருஷ்ணஸ்வாமி, மருத்துவ விஞ்ஞானி மோகனா தம்பதியின் சுயசரிதையே இந்நூல். இந்தியாவின் செறிவான பன்முகத்தன்மையை எடுத்துக் காட்டும் விதமாக 5 ஆயிரம் ஆண்டு வரலாறு, 'இந்து சமவெளி முதல் இந்திரா காந்தி வரை' என்ற உலகப் புகழ்பெற்ற ஆவணப்படத்தை நூலாசிரியர் தயாரித்தார். நிதிச்சுமை, அரசியல் கட்சிகள், அவசரநிலை பிரகடனம், ஆட்சி மாற்றம், ஆவணப்படத்தின் மீதான அலட்சியம் உள்ளிட்ட காரணங்களால் நூலாசிரியர் எவ்வாறெல்லாம் சோதனைக்கு ஆளாகினார் என்பதையும், அதை அவர் திறம்பட எதிர்கொண்ட விதம் குறித்தும் இந்நூல் விரிவாக பதிவு செய்துள்ளது.
அளப்பரிய திறமையிருந்தும், இட ஒதுக்கீட்டு கொள்கையால் மோகனாவின் மருத்துவ விஞ்ஞானியாகும் கனவு தகர்ந்தது நாட்டுக்கான இழப்பும்கூட! ராணுவம், நீதித்துறையில் இட ஒதுக்கீடு இல்லாததுபோல அறிவியல் ஆராய்ச்சியிலும் திறன் சார்ந்து மட்டுமே வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கேற்றாற்போல சட்டத்திலும் வகை செய்ய வேண்டுமெனவும் நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.
சுயசரிதையின் வழியே ஆவணப்படம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், இந்திய வரலாறு, மருத்துவ ஆராய்ச்சிகளில் நிலவும் முறைகேடுகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது.
முற்றிலும் வெவ்வேறான துறைகளைச் சேர்ந்த தம்பதிக்கு இடையே எழும் மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகளால் பிரிந்துவிடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்கு அடிநாதமாக இருவருக்கும் இடையே ஆழமான அன்பு பிணைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் தேவையையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்

ஜான்வி கபூரின் பிறந்த நாளில் பெத்தி படக்குழு வெளியிட்ட விடியோ!

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் மாணவர் எழுச்சி 1968; மொழி காக்க வெளிநடப்புப் போராட்டம்!
வீடியோக்கள்

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

