நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் தளபதிகள்

ஜெர்மனியின் அதிபராக 12 ஆண்டுகள் இருந்த ஹிட்லரைப் பற்றி அறிய உதவும் நூல் இது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2022, 11:44 am

DIN

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் தளபதிகள் - பிரேமசுதா மோகன்பாபு; பக். 640; ரூ.600; விஜயா பதிப்பகம், கோவை}641001; ) 0421}2382614.

ஜெர்மனியின் அதிபராக 12 ஆண்டுகள் இருந்த ஹிட்லரைப் பற்றி அறிய உதவும் நூல் இது.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது,  முதல் உலகப் போருக்கு எவ்வாறு வித்திட்டது, ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியில்  அவர் குடியேறியது,  முதலாம் உலகப் போர் தோல்விக்குப் பின்னர் அதிபராகப் பொறுப்பேற்றது, ஹிட்லரின் இனவாத அரசியல் பல மில்லியன் யூதர்கள் படுகொலைக்குக் காரணமாக அமைந்தது என்பதையெல்லாம் தெளிவாக அறிய முடிகிறது. 

தளபதிகளான பீல்டு மார்ஷல் கெய்டல், ஆல்ப்ரட் ஜோடல், ஓட்டோ டெய்ட்ரிச் ஆகியோருடனான விவாதம்,  உறவு, அவர்களது வீரம், திட்டங்கள் வகுத்தல், அதை செயல்படுத்துவதில் இருந்த திறமை, தனிமனித பண்புகள்,  நேச நாட்டுத் தளபதிகளின் கருத்துகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

ஹிட்லரைக் கொல்வதற்காக தனது ராணுவ வீரர் குண்டுவைத்த சம்பவத்தில் பல தளபதிகளுக்கு தொடர்பு இருப்பதைத் தெரிந்து பின்நாளில் கண்டறிந்து உளவுத்துறை மூலமாக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது என்ற தகவல் சுவாரஸ்யமானது. 

தளபதிகளின் வாழ்க்கையை தனித்தனியாகப் பதிவுசெய்வதால் மீண்டும் மீண்டும் சில நிகழ்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நூலாசிரியர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஹிட்லரை பற்றி முழுமையாக  அறிய உதவும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.