திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

அகிம்சை இஸ்லாமியக் கண்ணோட்டம் - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்; பக். 96; ரூ.80;  இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை- 12; 044-26624401

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு 'அமைதி' என்ற பொருளுக்கு ஏற்ப இந்த நூலில் அகிம்சை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அகிம்சை என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அதற்கு எதிர்சொல்லான வன்முறை குறித்து அதிகமாக எழுதப்பட்டுள்ளது. தனிநபர் வன்முறை, ஆன்மிக வன்முறை, பொருளாதார வன்முறை, கலாசார வன்முறை என பல்வேறு வகையிலான வன்முறைகள் குறித்தும் அதனால் சமூகம், நாடு, சர்வதேசமும் பாதிக்கப்படுவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

முடிந்தவரை போரைத் தவிர்த்துக் கொள்ளும்படி இஸ்லாம் அறிவுறுத்தி இருந்தாலும், போரை ஏன் இஸ்லாம் அனுமதிக்கிறது என்றும் போரில் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் என்ன என்றும் இந்த நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  தற்கால வன்முறையின் புதிய வடிவமான பயங்கரவாதத்தின் பல்வேறு வடிவங்களை அலசும் இந்நூல், வன்முறை, பயங்கரவாதம், வெறுப்புணர்வு ஆகியவை ஒழிய அன்பே அருமருந்து என்று தீர்வையும் முன்வைக்கிறது. 

'உள்ளமே எல்லாத் தீமைகளுக்கும் பிறப்பிடம். உள்ளம் தூய்மையானால் உலகமே அமைதியாக இருக்கும். குற்றங்கள் செய்தால் இவ்வுலகிலும், மறுமையிலும் தண்டனை கிட்டும் என்ற உணர்வு தீமைகளைச் செய்ய விடாமல் தடுக்கும் சக்தி' என தற்காலத்துக்கு தேவையான பல்வேறு அறிவுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.