திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

யார் நீ - சோம. வள்ளியப்பன்; பக். 248; ரூ.275; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; 044 - 4200 9603.

2007-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'யார் நீ' நூல் தற்போது விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பாக வந்துள்ளது.  சமூகத்திலும்,  சுய முன்னேற்ற வகுப்புகளிலும் அதிகம் விவாதிக்கப்படாத விஷயமான பர்சனாலிட்டி பற்றி விரிவாக இந்த நூலில் பேசப்பட்டுள்ளது. ஆளுமை, குணாதிசயங்கள்,  உள் மன நிலை, எண்ணங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பாக பர்சனாலிட்டியை வகைப்படுத்தலாம் எனக் கூறும் நூலாசிரியர்,  அதன் நிலைகள், தன்மைகள், சாதக, பாதகங்கள் குறித்து விளக்கியுள்ளார்.

மன நலனுடன் ஒருங்கிணைந்த பர்சனாலிட்டியை ஒருவர் முயற்சி செய்தால் மாற்ற முடியும் என்றும் கூறுகிறார் நூலாசிரியர்.  மிகவும் சிக்கலான நுண் தகவல்கள் அடங்கிய ஒரு நூலை தன்னைவிட எளிதாக எவராலும் எடுத்துரைக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.

உள்ளூரில் தொடங்கி உலகளாவிய உதாரணங்கள் வரை கூறி வாசகர்களை வாசிப்பு சுழலுக்குள் சிக்க வைக்கிறார். நாம் யார் என்று தெரிந்தால்தான் நமக்குள் என்ன மாற்றங்களை நிகழ்த்த வேண்டும் என்பது புலப்படும். அந்த வகையில், எம்பிடிஐ, டிஏ, 16 பிஎ'ஃ'ப், எனிய கிராம் போன்ற செயல்முறைகளின் மூலம் ஒருவரது பர்சனாலிட்டியைக் கண்டறிய முடியும்.  அந்த வழிமுறைகளின் வழியே வாசகர்கள் தங்களது குணாதிசயத்தையும், ஆளுமை நிலையையும் அறிந்து கொள்ள முடியும். சர்வதேச ஆய்வுகளையும், தரவுகளையும் இணைத்து உளவியல் கையேடாக வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.