மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இதழியல் வரலாறும் வழிகாட்டுதலும்

News image
Updated On :17 அக்டோபர் 2022, 9:32 am

DIN

இதழியல் வரலாறும் வழிகாட்டுதலும் - முனைவர் ப. பாலசுப்பிரமணியன் ; பக். 208 ; ரூ. 220 ; சங்கர் பதிப்பகம், சென்னை ; 044-26502086.

செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற இதழியல் துறையை  நூலாசிரியர் தனித்தனியாகப் பதிவு செய்துள்ளார்.  

பத்திரிகை வளர்ச்சிகள், இந்தியாவில் இதழியல், தமிழ்நாட்டில் பத்திரிகைகள், சுதந்திரப் போராட்டத்தில் பத்திரிகைகள்,  ஆங்கிலேயர் ஆட்சியில் பத்திரிகை சட்டங்கள் போன்றவற்றை தெளிவாக எளிய நடையில் நூல் பதிவு செய்கிறது. 

சுதந்திரத்துக்குப் பின்பு தமிழ் பத்திரிகை உலகின் வளர்ச்சி,  அதன் பங்களிப்புகளைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, பத்திரிகை அடிப்படை சட்டங்கள் குறித்து அறியும் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது நூலகங்களுக்கு இதழ்கள் அனுப்பும் சட்டம், பத்திரிகைகளில் பணிபுரிவோருக்குரிய சட்டம், பதிப்புரிமைச் சட்டம் உள்ளிட்டவை குறித்தும் அறியலாம்.

பத்திரிகை மன்றம் எப்படி செயல்படுகிறது, செய்தியாளருக்குத் தேவையான தகுதிகள், சிறப்புத் திறமைகள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் செய்தி பிரிவு எவ்வாறு செயல்படுகிறது ? செய்தி தேர்வு செய்யும் முறைகள் என்னென்ன?  அரசு செய்திகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? நீதிமன்றச் செய்தி, குற்றச் செய்தி, விளையாட்டு செய்தி, ஆன்மிக செய்தி உள்ளிட்ட பிரிவுகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.  செய்தி நிறுவனங்கள் குறித்த பொதுத் தகவல்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இளம் தலைமுறையினர் சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.