தூய்மை - இல.அம்பலவாணன்; பக்.120; ரூ.140; காவ்யா, சென்னை - 24; 044-23726882.
தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வேலைநிமித்தம் உடல், மன ரீதியாகத் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் இது.
குப்பை வண்டியைக் கடந்து செல்வோர் மூக்கைப் பிடித்துக்கொண்டு வேகமாக வண்டியைக் கடக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அந்த துர்நாற்றத்துக்கு மத்தியில்தான் தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள் என்பதை யாராவது சிந்தித்துப் பார்ப்பார்களா என்று தூய்மைப் பணியாளர் தாமரை கேள்வி எழுப்புகிறார்.
தெருவிலோ, நகரிலோ அல்லது வேறு எங்கேனும் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அந்தப் பகுதிக்கான தூய்மைப் பணியாளர்களைச் சந்தேகிப்பதும், விசாரணை என்ற
பெயரில் கண்மூடித்தனமாக காவல் துறை அவர்களை அலைக்கழிக்கும் அவலத்தையும் மணிவண்ணன் என்ற கதாபாத்திரம் மூலம் இந்த நாவல் பதிவு செய்துள்ளது.
உயிருக்குப் பாதுகாப்பற்ற பணிச் சூழல், துர்நாற்றங்களுக்கு மத்தியில் பணிபுரிதல், பாரபட்சத்துடன் நடந்துகொள்ளும் சமூகம், தங்களின் பணி குறித்து விழிப்புணர்வின்மை
உள்ளிட்டவைகளை பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் நாவலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் உதவிக்கரமாகவும் திகழ்ந்து பணி நிமித்தமாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிர்வரும் சோதனைகளைத் திறம்பட எதிர்கொள்வது இந்நாவலின் சிறப்பு. தூய்மையின் மீதும், தூய்மைப் பணியாளர்கள் மீதும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது இந்த நாவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்

ஜான்வி கபூரின் பிறந்த நாளில் பெத்தி படக்குழு வெளியிட்ட விடியோ!

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் மாணவர் எழுச்சி 1968; மொழி காக்க வெளிநடப்புப் போராட்டம்!
வீடியோக்கள்

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

